பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

267


கடல்மீது வேல் எறிந்து, அதைப் பின்னடையச் செய்யும் இவ்வீரச்செயல், பிற்காலத்தில், ஒரு பா ண் டி ய ன் ஒருவனுக்கும், அதன் காரணத்தால் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் எனும் பெயர் பூண்டானுக்கும் ஏற்றி, உரைக்கப்பட்டுளது (புறநானூற்று 9ஆம் எண் பாடலையும், அப் பாடலின் 10ஆம் வரிக்கு, இன்றைய பதிப்பாசிரியரின் குறிப்பையும் காண்க.) ஈண்டு எடுத்துக் காட்டிய எடுத்துக் காட்டுக்கள், ஓர் எளிய கடல்விழா, எத்துணைப் பெரிய வெற்றிச் செயலாக உருப்பெற்று விட்டது என்பதைக் காட்டுகின்றன.

நெடுஞ்சேரல் காலத்தில், சேரநாடு ஆரிய ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டு வரப்பட்டு விடவே நெடுஞ்சேரலாதன், கடல் ஒதுங்கி இடம் அளிக்கக் கடல்மீது வேல் எறிந்த பரசுராமன் கதையால் ஊக்கம் பெற்று, அப்பிராமணப் பெருவீரன் செயலை முன்மாதிரியாகக் கொண்டு விட்டது நடந்திருக்கக் கூடியதே. பிற்காலத்தே, மதுரைத்தலபுராணம் உருவாகவே, இவ்வெற்றிச் செயல், பாண்டியன் ஒருவனுக்கும் ஏற்றி உரைக்கப்பட்டது. மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சிவனிடம் தெய்வத்தன்மை வாய்ந்த வேல் ஒன்றைப் பெற்று, அதை எறிந்ததன் மூலம், தன் கால்களைத் தழுவி நின்ற கடலை வற்றச் செய்த உக்கிரபாண்டியன் கதை திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணத்தில் (20:6) விளங்க உரைக்கும் வகையில் உருவாகிவிட்டது. இக்காலத் தமிழறிஞர் பலரும், வடிம்பலம்ப நின்ற பாண்டியன், புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளான் என்கின்றனர். புறம்: 9ல் வரும் 10வது வரியாகிய, "முந்நீர் விழவின் நெடியோன்" என்ற தொடர்க்கான வி ள க் க மா க, பதிப்பாசிரியர் டாக்டர் உ. வே. சாமிநாத அய்யர்தாம்,