பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

தமிழர் வரலாறு

கொண்ட, அவனுடைய வலிய காவல் மரமாம் வேம்பினை வெட்டி வீழ்த்திய மிக்க சினமுடையோனாகிய குட்டுவன்"

"எஃகு துரந்து எழுதரும் கைகவர் கடுந்தார்
வெல்போர்வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து
மொய்வளம் செருக்கி, மொசிந்துவரு மோகூர்
வலம்படு குழுஉநிலை அதிர மண்டி
நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர்
நிறம்படு குருதி நிலம்படர்ந்து ஓடி
மழைநாள் புனலின் அவல் பரந்துஒழுகப்
படுபிணம் பீறங்கப், யாழ்பல செய்து
படுகண்முரசம் நடுவண் சிலைப்ப
வளனற நிகழ்ந்து, வாழுநர் பலர்படக்
கடுஞ்சின விறல் வேம்பு அறுத்த

பெருஞ்சினக் குட்டுவன்."
- பதிற்று : 49 : 6-17

புறம்: 869ல், போர்க்கள நிகழ்ச்சி ஒவ்வொன்றையும், தொடர்பான பல்வேறு தொழில்களாக விளக்கிக் கூறும் உருவக அணியில், குட்டுவனைப் புகழ்ந்து பரணர் பா டி யு ள் ளா ர். அப்பாட்டு, இலக்கியச் சிறப்புடையதேயல்லது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது அன்று; ஆகவே, அது, ஈண்டு எடுத்துக்காட்டப்படவில்லை.

குட்டுவன் குறித்த கற்பனைக் கதைகள்

ஐந்தாம் பத்தின்பதிகம், குட்டுவன் போர்ச்செயல் குறித்து மூலத்தில் குறிப்பிடப்படாத பலவற்றின் குறிப்புகளைக் கொண்டுளது. "பத்தினிக் கடவுளுக்குப் படிமம் செய்வதற்கான கல்லைக் கொள்வான் வேண்டி, காற்று விரைந்து வீசும் காடுகளை அம்புபோல் விரைந்து கடந்து, ஆரிய அரசர்களை வென்று, பெரும் புகழ் வாய்ந்ததும், இனிய பல அருவிகளைக் கொண்டதும் ஆன கங்கையில் நீராடி, அந்நாட்டவாக்குரிய ஆனிரை பலவற்றை, அவற்றின்