பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

273


மிகைபடக் கூறலாகக் கொள்ளலாம். ஆனால், பலநூறு ஆண்டுகளுக்குப் பிற்பட்ட காலத்தவராய ஓர் உரையாசிரியர், அதைப்புகுத்துவராயின், அது, கட்டுப்பாடற்ற விளையாட்டுக் கற்பனையின் விளைவேயாகும்.

தமிழ் நாட்டின் மீது மெளரியர் படையெடுப்பு - ஒரு மற்றொன்று

விரித்தல்.

சில பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், திருவாளர் மு. ராகவ அய்யங்கார் அவர்கள், அகநானூற்றிலிருந்து, அது, அந்நிலையிலும் அச்சிடப் படாத நிலையில், மோரியர் என்ற சொல் இடம் பெற்ற மூன்று பாடற்பகுதிகளைக் கண்டு வெளிப்படுத்தினார். அதில் முக்கியப் பகுதி, "வெற்றிக் கொடியிலையும், காற்றுப்போல் விரையும், அழகுறப்புனையப்பட்ட தேரினையும் உடைய கோசர், மிகப்பழைய ஆலமரத்தின் அரிய கிளைகளின் கீழான மன்றத்தில், இனிய இசை எழுப்பவல்ல முரசம், குறுந்தடியால் அடிக்கப்பட்டு ஒலிக்க, பகைவர் போர்முனையை அழித்தபோது, மோகூர் மன்னன் பணிந்து வாராமையால், அவன் பால் பகை கொண்டு வந்த, குதிரைப் படைகள் நிறைந்த பெரிய சேனையினையுடைய புதிய மோரியர் என்பார் புனையப் பெற்ற தம் தேர்களின் உருளைகள், தடையின்றி உருண்டோடுவதற்காக, உடைத்து வழி செய்யப்பட்ட, ஒளி வீசும் வெண்ணிற அருவிகளைக் கொண்ட மலையிடை வழி" எனக்கூறுகிறது.

"வெல் கொடித்
துனைகால் அன்ன புனைதேர்க் கோசர்,
தொன்மூது ஆலத்து அரும்பணைப்பொதியில்
இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்கத்,
தெம்முனை சிதைத்த ஞான்றை, மோகூர்
பணியா மையின் பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்

த. வ. II-18