பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

தமிழர் வரலாறு


கண்டனர். கோசரின் துளு நாட்டிற்கு வடக்கில், மெளரியர்களின், பெரும்பாலும், பாடலிபுத்திரத்து மெளரிய இனத்து ஒரு பிரிவின் வழிவந்த சாளுக்கிய இனத்து முதலாம் கீர்த்தி வர்மனின் [கி. பி. 566-597] பகைவர்களாகிய மெளரியர்களின் நாடு இடம் பெற்றிருந்தது. கோசரோடு இணைந்து தமிழ் நாட்டின் மீது ஒரு படையெடுப்பை மேற்கொள்ள முயன்ற மெளரியர், இந்த மெளரியராதலே இயலும்.

மெளரியர் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் பாக்களைப் பாடிய புலவர்களின் கருத்தெல்லாம், கோசர், மெளரியர்களின், அத்துணை முக்கியத்துவம் இல்லாத தனி படையெடுப்புப் பற்றியதாகாது, அவர்களின் தேர்ப்படை. இனிது செல்ல, பாறைகளை அகற்றிப் பண்ணிய பாதைகளைக் கொண்ட மலைநாடு, இருக்கும் சேய்மை பொருள் ஈட்டும் முயற்சி மேற்கொண்டு அதற்கப்பாலும் சென்றிருக்கும் காதலன் பற்றியதேயாம்.

இப்பொருள் பற்றிக்கூறும் இரண்டாம் பாடற் பகுதி இவ்வாறு கூறுகிறது : "வானளாவ நீண்டுயர்ந்த பெருமலைகளில் செல்லத் தக்க தேர்ப்படையினையுடைய மோரியர், பொன்னால் பண்ணப்பட்ட தங்கள் தேர்களின் உருளைகள் இனிது இயங்க, வெட்டி வழிசெய்யப்பட்ட குன்றுகள்."

"விண்பொரு நெடுவரை, இயல்தேர் மோரியர்
பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த

அறை."
-அகம் : 69 : 18.12.

மூன்றாம் பாடற்பகுதி, முதற்பாடற் பகுதியின் ஆசிரியராகிய மாமூலனாரால் பாடப்பட்டது : அது இவ்வாறு கூறுகிறது. "அசைந்து அசைந்து நடைபோடும் இயல்பு வாய்ந்த இளம் மயில்கள் உதிர்த்து விட்ட தோகையை நீண்ட வாரினால், வலிய வில்லில் வைத்துக்கட்டி, அந்த வலிய வில்லின் அழகிய நீண்ட நாணின் விளிம்பிற்குப் பொருந்திய விரைவுத் தன்மை வாய்ந்த, பேரொலி எழுப்பும் விரைந்த