பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/288

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

தமிழர் வரலாறு


“வென்வேல்,
விண்பொரு நெடுங்குடை, கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைசுழி அறைவாய்”

- புறம்: 175 : 5-8.

சந்திரகுப்தன் அல்லது பிந்துசாரன் காலத்தில் மெளரியர்களின் இந்தியப் படையெடுப்பு, என்ற கோட்பாடு, இந்நான்கு பாடற்பகுதிகளை அடிப்படையாகக் கொண்டுளது. இக்கோட்பாட்டிற்கு அரணாக, திருவாளர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள், இப்பாடற் பகுதிகள் கி. பி. முதல் நுர்ற்றாண்டில் கொண்டு வைக்கத்தக்கனவாம் என்று கருதி [Beginnings of South Indian History, p. - 8] மாமூலனார், சோழப் பேரரசன் கரிகாலனின் சமகாலத்தவர் என்பதற்கான அகச்சான்றும் உளது என்று கூறுகிறார். (Beginnings of South Indian History. page : 87] அந்த அகச்சான்று எது என்பதை அவர் அறிவிக்கவில்லை. கரிகாலனின் பகைவனாகிய பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர் துறந்தபோது, அது கேட்ட அவன் அவைக்களப்புலவர்களும் வடக்கிருந்து உயிர் துறந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார். (அகம்: 55 :10-14). இது, மாமூலனார் கரிகாலனுக்குப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தவர் என்பதை நிலைநாட்டும் ; எத்தனை ஆண்டு பிற்பட்டவர் என்பதைச் கூற இயலாது. உண்மையைக்கூறின், தம்முடைய பாக்கள் பலவற்றிலும், இந்நூல் 20, 21, 23, மற்றும் இந்த 25 ஆகிய அதிகாரங்களில் குறிப்பிடப்பட்ட எந்த அரசர்களின், சமகாலத்தவராகத் தம்மை, மாமூலனார் குறிப்பிடவில்லை ; மாறாக, கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில், சேர, சோழ, பாண்டியராகிய தமிழ் அரச இனம் மூன்றும் வீழ்ச்சி உற்ற பின்னர், ஆட்சிக்கு வந்துற்ற எண்ணற்ற குறுநிலத் தலைவர்களின் காலத்தவராகவே காட்டிக்கொண்டுள்ளார். ஆகவே, பழைய தொகை நூல்களில் தொகுக்கப்பெற்ற பாடல்களைப் பாடிய புலவர்கள்