பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/289

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேர அரசர்கள்

279

அடங்கிய கடைச்சங்ககாலப் புலவர்களில் கடைசியானவராவர்”

திருவாளர் கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள், மெளரியர் படையெடுப்பு அலையினை, மதுரை மற்றும் பொதிகை மலைவரை நீண்டு சென்றதாகக் கொண்டுள்ளார். அகம் 251 ல் வரும் “பொதியில்” என்ற சொல்லைப் பிழை படப்பொருள் கொண்டுவிட்டதே அவரின் அம்முடிவுக்குக் காரணமாம் “பொதியில்” என்ற சொல், கோசர் கூடியிருப்பதைச் சுட்டிக் காட்ட வந்திருக்கும் பாடற்பகுதி எதிலும், அது, பொதிகைமலை எனும் பொருள் தரும் வகையில் “பொதியில் இல்” என வந்திலது. அக்கோசர் காணப்படும் இடமெல்லாம் சாகாவரம் பெற்ற அகஸ்தியரும் அவர் மாணவர்களும் இடங்கொண்டிருக்கும் மலையோடு இணைக்கக் கூடாத, முதிர்ந்து நன்கு தழைத்த ஆலமரத்து அடிகளே ஆகும்.

இப்பொருள் பற்றிய திறனாய்வில், கோசர்க்குச் சிறப்பான இடம் இருப்பதால், இத்திறனாய்வினை முடிப்பதற்கு முன்னர்ப் பழந்தமிழ் இலக்கியத்தில், கோசர் பற்றிக் குறிப்பிடப்படும் பலவற்றிலிருந்து இரண்டைமட்டும் ஈண்டு எடுத்துக்காட்டுகின்றேன். முதலாவதும் ஒரு உவமையே ; அதன் பொருள் வருமாறு. “முரசு முழங்கவும், சங்கு ஒலிக்கவும், நனி மிகப் பழமை வாய்ந்த ஆலமரத்து அடியில் உள்ள மன்றத்தில், தங்கித் தோன்றிய நாலூர்க் கோசரின் நன்மொழி போல”

“பறைபடப், “பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு
தொன்முது ஆலத்துப் பொதியில் தோன்றிய