பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

தமிழர் வரலாறு

நாலூர்க் கோசர் நனமொழி போல’

-குறுந்தொகை : 15 :1-3

;


ஈண்டு எடுத்துக் காட்டிய அனைத்தும், ஒரே ஒரு நிகழ்ச்சியைக் குறிக்கவே - அதாவது, மோரியரின் தூசிப்படையாக, கண்மூடிக் கண் திறப்பதற்குள் நடந்து விடும் நாடக மேடைக் காட்சிபோல் கோசர் வந்து தோன்றும் அவ்வொன்றைக் குறிப்பனவே. அடுத்து வரும் பகுதி பின் வருமாறு கூறுகிறது. மழை பெய்வது இடையற்றுப் போகாமையால் தப்பாத விளைவினையுடைய பழையன் என்பானுக்குரிய மோகூரிடத்து அரசவை பெருமை பெற்று விளங்க, நான் மொழிக் கோசர் என்பார் வீற்றிருந்தாற் போல”

“மழை ஒழுக்கறாஅப் பிழையா விளையுள்
பழையன் மோகூர் அவையகம் விளங்க,
நான் மொழிக் கோசர் தோன்றி அன்ன”

- மதுரைக் காஞ்சி : 507 - 509:


நான்மொழிக் கோசர் என்பது அக்கோசர், துளு, கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய நான்கு மொழிகளைப் பேசவல்லவர் என்றே பொருள்படும். கோயம்புத்தார் தெருக்களில், இந்நான்கு மொழிகளும் பேசப்படுவதை இன்றும் கேட்கலாம். உரையாசிரியர், “நால்மொழிக் கோசர்” என்பதை மொழி நால் கோசர் எனச்சொல் மாற்றிக் கொண்டு தாங்கள் கூறிய வாய்மையில் வழுவாது நிற்கும் நால்வகைக் கோசர் எனப்பொருள் கூறியுள்ளார். இது, வளிந்து பொருள்கொள்ளப்பட்டதாம்: மேலும், கோசர், நால் வகையினராய் இருந்தனர் என்பது வேறு வகையில் அறியப்படாதது.