பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25ஆம் அதிகாரத்தின் பின் இணைப்பு

"மாமூலனார்; தொகை நூல்களில் இடம் பெற்றுள்ள புலவர்கள்

வரிசையில் கடைசியில் வைத்து எண்ணத்தக்கவர்: கி. பி;

ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர்" எனத் திரு. சீனிவாச அய்யங்கார் கூறுவது (தமிழர் வரலாறு : பக்கம் : 525) ஏற்புடையது தானா?

இதற்குத் திரு. அய்யங்கார் கூறும் காரணங்கள் இரண்டு> ஒன்று: அவர், தமிழர் வரலாறு என்ற தம் நூலின் 20, 22 ஆம் அதிகாரங்களில் ஆராயப் பெற்ற கரிகாலன் உள்ளிட்ட சோழர் குல அரசர்களையோ, 21ஆம் அதிகாரத்தில் ஆராயப்பட்டிருக்கும் இளந்திரையனையோ, 23 ஆம் அதிகாரத்தில் ஆராயப்பட்டிருக்கும் முதுகுடுமிப் பெருவழுதி உள்ளிட்ட பாண்டியர்குல அரசர்களையோ, 25 ஆம் அதிகாரத்தில் ஆராயப்பட்டிருக்கும் பெருஞ்சேரலாதன் உள்ளிட்ட சேரர் குல அரசர்களையோ பாடினார் அல்லர் என்பது. இரண்டு மேலே கூறிய மூவேந்தர்களின் ஆட்சியின் அழிவுக்குப்பின்னர், கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆளத் தொடங்கிய எண்ணற்ற குறுநிலத் தலைவர்களையே பாடியுள்ளார் என்பது.

As a matter of fact Mamulanar speaks in may odes as the cotemporary, not of any of the Kings referred to in chapters XX, XXI, and XXIII and in this chapter (XXV), ut of the numerous chieftains that rose to power, after the decline of the three Tamil dynasties at the end of the V entury A. D. and is bence the latest of the galary of oets, whose poems are included in the early anthologies.

-History of the Tamils : Page : 524-25