பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 தமிழர் வரலாறு

பெருமக்கள் வாழும், அகன்று நீண்ட தெருக்களில் அமைந்துள்ள. காவல் மிக்க பண்டக சாலைகளில், மேகம், கடவிடத்தே, முகந்துகொண்ட நீரை மலையிடத்தே பொழிவதும், மலையிடத்தே பெய்த மழைநீர், கடலில் சென்று. சேர்வதும் மாரிக்காலத்தில், மாறி மாறி நிகழ்வது போலக், கடல்வழி வந்து கலங்களிலிருந்து இறக்கப்படுவனவும், தானிலங்களிலிருந்து வந்து நாவாய்களில் ஏற்றப்பட இருப் பனவுமாய பண்டப்பொதிகள் எண்ணிக் காணமாட்டா அளவு: குவித்துகிடக்கும். அப்பண்டங்களுக்கான சுங்க வரியைக் கணக்கிட்டுத் தண்டிக்கொண்டு, அதற்கு அடையாளமாகச், - சோழ அரசின் புலிச்சின்னம் பொறிக்கப்படும். அது செய்து அரசன் வருவாயைப் பெருக்கும் கடமையுணர்ச்சியால் புகழ் கொண்டவர்களாகிய சுங்க அலுவலர், காயும் கதிர்களைக் -கொண்டோனாகிய ஞாயிற்றின் தேரில் பூட்டப்பட்ட குதிரைகள், நாளும், நாழிகையும் தவறாது. நடைமெலிவு காணாது. ஈர்த்துக் செல்வதேபோல், இரவு பகல் ஓயாமல், - ஒரு சிறிதும் தளர்வின்றிக் கடமை ஆற்றிக்கொண்டிருப்பர்

    முகில் உலாவும் முடியினையும், மூங்கில் வளரும் சாரலினையும் உடைய மலைகளில், துள்ளித்திரியும் எட்டுக் கால்களையுடைய,வருடை என்ற கற்பனைப் பறவைபோலத் தோன்றும், கூறிய நகத்தினை உடைய மயிலும், வளைந்தக் கால்களையுடைய எருதும் ஆட்டுக்கிடாய்களும், வீடுகளின்  முற்றத்தில் தள்ளிக்குதித்து இன்புறும். (மொழிபெயர்ப்பு ஆசிரியர் குறிப்பு: இப்பொருள் கொள்வதற்குக் காரணமாயிருப்பன 137 முதல் 141 வரையான வரிகளாகும். இவ்வரிகளுக்குப் பண்டக சாலையின் முற்றத்தில், புலிச்சின்னம் பொறித்து மலைப்போலக் குவியப் போடப்பட்டிருக்கும் பண்டப் பொதிகள் மீது, மலைமீது துள்ளி ஆடும் வருடை மான் போல், நாய்களும், ஆட்டுக் கிடாய்களும் துள்ளி ஆடும் எனப் பொருள் கொள்வதே நேரிதாம்) ஏறி மனைபுகுவதற்குத் துணைபுரியும் அடுத்தடுத்த பல படிகளையும், உயர்ந்த ஏணிகளையும் கொண்டு, பல கட்டுக்களையும், சிறுவாயில், பெருவாயில் எனப் பல வாயில்களையும். நீண்ட இடைகழி