பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

தமிழர் வரலாறு

அழுந்தூர்த்திதியன் பால்சென்று முறையிட, வீரம் செறிந்த வீரர்கள் நிறைந்த சிறுசிறு காட்டரண்களைக் கொண்டிருந்த வெற்றி வீரனாம் அத்திதியன் அக்கோசர் பலரைக் கொன்று தீர்த்த நிகழ்ச்சியைப் பரணர் பாடியுள்ளார்.

“பாசிலை அமன்ற பயறு ஆபுக்கென
வாய்மொழித் தந்தையைக் கண்களைந்து அருளா
ஊர்முது கோசர் நவைத்த சிறுமையின்
கலத்தும் உண்ணாள் ; வாலிதும் உடாஅள் ;
சினத்திற் கொண்ட படிவம் மாறாள் ;
மறங்கெழு தானைக் குற்றக் குறும்பியன்
செருவியல் நன்மான் திதியற்கு உரைத்து அவர்
இன்னுயிர் செகுப்பக் கண்டு கினம் மாறிய

அன்னி மிஞிலி.”
—அகம் : 262.

தன் காவல் மரமாம் புன்னையை வெட்டி வீழ்த்த வேண்டும் என விரும்பி அது செய்யற்க என நண்பன் எவ்வி தடுக்கவும், அது கேளாதே வந்து தன்னை எதிர்த்த அன்னி என்பானைக் கொன்ற கொற்றமிகு திதியள் ஒருவன் புகழ் பாடியுள்ளார் நக்கீரர்.

“எவ்வி நயம்புரி நன்மொழி அடக்கவும் அடங்கான்
பொன்னிணர் நறுமலர்ப் புன்னை வெஃகித்
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை”

—அகம்: 1261

குறுக்கைப் பறந்தலைப் போரில், திதியனின் புன்னையை வெட்டி வீழ்த்திய அன்னியின் செயல் கண்டு ஆரவாரப் பேரொலி எழுப்பினர் இரவலர் என்கிறார் வெள்ளி வீதியார்

‘அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன்

தொன்னிலை முழுமுதல் துமியுப் பண்ணிப்