பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

299

 முத்து, வலம்புரிசங்கு ஆகியவற்றின் பெருமைகளையும் பாராட்டியுள்ளார்.

"வினை நவில் யானை விறற்போர்ப் பாண்டியன்
புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்துறை
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி."

- அகம் : 201.

ஆக, மாமூலனார், மூவேந்தர்களைப் பாடவில்லை என்ற திருவாளர் அய்யங்கார் அவர்கள் காட்டும் காரணத்திலும் உண்மையில்லை என்று தெளிவாகிறது.

மோரியரின் தென்னாட்டுப் படையெடுப்பைக் குறிப்பிட்டிருப்பவர் மாமூலனார் ஒருவர் மட்டும் அல்லர். மேலும் இருவர் குறிப்பிட்டுள்ளனர். ஒருவர், கள்ளில் ஆத்திரையனார்; மற்றொருவர் உமட்டூர்கிழார் மகனார் பரங்கொற்றனார். மோரியர் வருகையை, "வென்வேல், விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்" எனப் புறத்தில் (175) குறிப்பிடும் கள்ளில் ஆத்திரையனார், தம்முடைய குறுந்தொகைப் பாட்டு ஒன்றில் "ஆதி அருமன்" (293) என்பானைக் குறிப்பிட்டுள்ளார். இதே ஆதிஅருமனை, நக்கீரர் நற்றிணைப் பாட்டு ஒன்றில் (367) "மூதில் அருமன்" எனக் குறிப்பிட்டுள்ளார். -- -

ஆகவே, மோரியர் வருகையைக் குறிக்கும் கள்ளில் ஆத்திரையனாரும், கடைச்சங்கத்துத் தலைவர்களுள் ஒருவராம் நக்கீரர் காலத்தவர் என்பது உறுதியாகிறது. --

அதே போல், "விண்பொரு நெடுவரை இயல்தேர் மோரியர்" என மோரியர் வருகையைக் குறிக்கும் பிறிதொரு புலவராம் உமட்டூர்க் கிழார் மகனார் பரங்கொற்றனார்., அதே பாட்டில் (அகம் : 69) "அரண்பல நூறி, நன்கலம் தறூஉம் வயவர் பெருமகன் சுடர்மணிப் பெரும்பூண் ஆஅய்" என ஆயையும் பாராட்டியுள்ளார். இந்த ஆயைப் பாடிய புலவர் பல்லோருள் பரணரும் ஒருவர். "சென்றோர்க்குச் சாலவிழ் நெடுங்குழி நிறைய வீசும் மாஅல் யானை ஆய்கானம்"