பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

303


India, in the reign of Chandragupta or Bindusara rests on these four passages. Possibly as a prop for the theory, S. Krishnasamy Ayyangar, assumes that these passages are, ascribable to the first century of the christain era; "(Page: 85); and says that, "there is enough internel evidence to show that Mamulanar was the exact contemporary of the chola rular Karikala" (Page : 87). He does not tell us what that internal evidence is. He alludes to the fact that, when Peruncheraladan, the foe of Karikal committed suicide, his courtiers heard of it; and they also committed suicide." (History of the Tamils Page : 524.]

திருவாளர் எஸ் கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் கரிகாலன் காலத்தவர் மாமூலனார் : ஆகவே, கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கூறியிருக்கவும், அதற்கு அவர் எடுத்து வைத்திருக்கும் சான்றுகளை மறுக்க இயலாத திருவாளர் பி. டி. எஸ். அவர்கள். "தம் முடிவிற்கு உறுதி செய்யவல்ல போதிய அகச்சான்றுகள் உள்ளன எனக் கூறிய கிருஷ்ணசாமி அய்யங்கார், அந்த அகச்சான்று யாது என்பதைக் கூறவில்லை" என்று மட்டுமே கூறித் தம் வாதத்தின் வலுவின்மைக்கு, மறைமுகமாக ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், மோரியர் தெ ன் னா ட் டு ப் படையெடுப்பு, கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே நடைபெற்றிருக்க வேண்டும் என்ற கொள்கை, மேலும் சில வரலாற்றுப் பேராசிரியர்களிடையேயும் நிலவி வருகிறது என்பதும் ஈண்டுக் குறிப்பிடல் தகும்.

மதுரை நாயக்க மன்னர்கள் (Nayaks of Madura) சென்னைப் பல்கலைக்கழகச் சார்பில், 1944ல், திரு. சத்தியநாத அய்யரால் நிகழ்த்தப்பட்ட இரண்டு சொற்பொழிவுகளின் தொகுப்பாம் "தொண்டை மண்டலத்தின் பழைய வரலாறு"