பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

305


அழிவினை வடநாட்டில் எண்ணிப் பார்க்கவும் இயலாது; சங்க காலத் தமிழ் இலக்கியங்களில், மோரியர் படையெடுப்பு பற்றிய குறிப்புக்கள் (மாமூலனாரின் இரண்டையும் சேர்த்து) நான்கு உள்ளன. கரவேலனின் அதிகும்பா கல்வெட்டு, தன் கேட்டிற்குக் காரணமாய் இருந்த தமிழ் நாட்டரசர்களின் மிகப்பெரிய கூட்டணி ஒன்றைக் குறிப்பிடுகிறது. அந்தக் கூட்டணி கி. மு. 278ல் தோன்றியிருக்க வேண்டும். இந்த நாள் பிந்துசாரன் ஆட்சிக்கால எல்லைக்குள் அடங்குகிறது:

"தமிழ் அரசர்கள், ஆரியரை வென்ற நிகழ்ச்சி, தமிழிலக்கியங்களில் பரவலாகக் குறிப்பிடப்பட்டுளது. இது, கரவேலனின் அதிகும்பா கல்வெட்டு குறிப்பிடும் தமிழரசர்களின் கூட்டலணியை உறுதிசெய்கிறது. கலிங்கம், பிந்துசாரனால் வெற்றி கொள்ளப்படாமல், அசோகனால் கொள்ளப்பட்டமைக்கும், தமிழரசுகள், அசோகனின் ஆட்சிக்கு அடங்காத் தனிநாடுகள் என, அசோகனால் குறிப்பிடப்பட நேர்ந்தமைக்கும் காரணம், பிந்துசாரன் தமிழகத்தில் பெற்ற தோல்வியே காரணம்," என்றெல்லாம் கூறியுள்ளார். திரு. சத்தியநாதய்யர்,

The inclusion in Asoka’s empire of a substantial part of cis-vindhyan India, raises the question of its conquest: There is no definite ascription of such a consequet to Chandragupta (325.301. B. C.) We may regard Kalinga as the only region conquerred by Asoka. To Bindusara is ascribed by Taranatha, the Tibetan historian, the destruction, with the help of Kautilya, of the Kings and ministers of about sixteen towns, as well as the annexation of the territory, between the Eastern and Western oceans. The association of Kautilya with king Bindusara is supported by Hemachandra, the author of "Arya-Manjus Mulakalpa". Hemachandra says, that Bindusara was a "bala" (young

த.வ.II-20