பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழைய அரச இனங்கள் ஒளிகுன்றல்

315


முரசுணங்கச் சங்கு உணங்கும் மூரித்தேர்த்தானை

அரசு உணங்கும் அச்சுதன் முற்றத்து."

சோழனால் பாடப்பெற்ற இரண்டாவது பாடல் இவ்வாறு கூறுகிறது ; "அரசர்குல திலகனாகிய அச்சுதனுடைய முற்றத்தில், அவன் பிறந்த நாள் விழா அன்று முரசுகள் அதிரக்கொட்டிவிடுவதால் எழும் ஓசையைக் காட்டிலும், அவன் பகை அரசர்களாம் பேரரசர்களின் உரிமைகளைத் திரும்பத் தந்து, அவர்களை நாட்டிற்குப் போக விடுவதற்கு முன்னர், அவர்களின் கால்களில் பண்டு இட்டிருந்த விலங்குகளை வெட்டி விடுவதால் எழும் பேரொலியே பெரிதாம்" என்கிறது.

"அரசகுல திலகன், அச்சுதன் முற்றத்தில்
அரசர் அவதரித்த அந்நாள்-முரசுஅதிரக்
கொட்டிவிடும் ஓசையினும், கோவேந்தர் கால்தனையை

வெட்டிவிடும் ஒசைமிகும்."

பாண்டியன் பாடிய முதற்பாட்டு இவ்வாறு கூறுகிறது : "வாழ்க்கையில் குறையிலாதவர், உலகில் எங்கே இருக்கிறார்கள் : தன் மனைவியைப் பிரியவிட்டு, கூரியவேல் உடையோனாகிய இராமனே, வாவியின் தம்பியாம் சுக்கிரிவன் மலைக்கு முன்பே, ஓர் ஆறு மாதம் முழுவதும் காத்திருந்தான் ; போர் எனக்கேட்டுப் பூரிக்கும் படையும் அசையும் மாலையும் உடையோனாகிய அச்சுதன் முற்றத்தின் முன் நான் காத்துக் கிடக்கின்றேன்."

"குறையுளார் எங்கிரார் ? கூர்வேல் இராமன்
நிறையாறு திங்கள் இருந்தான்-முறைமையால்
ஆலிக்கும் தானை அலங்குதார் அச்சுதன்முன்

வாலிக்கு இளையான் வரை."

இப்பாட்டில், பாண்டியன், தன்னை இராமனாகவும், அச்சுதனை, இராமனை வழிபடும் குரங்கினத்தவனாகவும்