பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

தமிழர் வரலாறு

வேரொடு கல்லி எறியப்பட்டு விடவில்லை. பாண்டியர்கள், கடுங்கோன் ஆட்சியின் கீழ், கி. பி. 600ல், தம் பெருமையை மீண்டும் நிலநாட்டிக் கொண்டனர் ; சேர, சோழ, பாண்டியர் மற்றும் களப்பிரர், இரண்டு நூற்றாண்டு வரை, பல்வேறு கல்வெட்டுக்களிலும், செப்புப்பட்டயங்களிலும், முதலில் பல்லவரின் பகைவர்களாகவும், பின்னர்ச் சாளுக்கியர் பகைவர்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மூவேந்தர்களும், களப்பாளரைத் தமிழிலேயே பாடிப் பாராட்டியுள்ளமையால் உறுதிப்படுவதால், களப்பாளர்கள், தமிழ்க் குறுநிலத் தலைவர்களே ஆவர். அவர்கள், ஆரிய சமயங்களைப் பேணிப்புரந்தமையால், அவர்கள், அறவே ஆரிய மயமாக்கப் பட்டுவிட்டனர். தமிழ் நாகரீகத்தைப் பல நூறு ஆண்டுகாலமாகச் சுற்றிவளைத்துக் கிடந்த, ஆரிய நாகரீகம், பழைய தமிழ் மரபுகளைப் பேணிக்காத்துவந்த, பழந்தமிழ் அரச இனம் மூன்றும், அச்சுதன் ஆற்றலின் முன் நிலைகுலைந்து போன அந்நாள் தொட்டு, தமிழர் சிந்தனைச் செல்வங்களை வியத்தகுநிலையில் கைப்பற்றிக் கொண்டது.

களப்பிரர், கள்ளரா?

திருவாளர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார், களப்பிரர், பழந்தமிழ்ப்பாக்களில் இடம் பெற்றிருக்கும் கள்ளர் ஆவர் என்ற கொள்கைக்குத்துணை செய்கிறார். "கள்ளர்" என்பதற்குக் "கள்வர்" என்ற மாற்றுவடிவம் உண்டு : "களவர்" என்பது, பழைய ஓலைச்சுவடிகளில் "ள" என்பதன் கண் உள்ள புள்ளி இடப்பெறாமல் ‘களவர்” என ஆதலும் உண்டு. "களவர்" என்ற அது, "களபர்" "களபா" "களப்ஹர" என்றும் இறுதியாக "களப்ஹர" என ஆகும்: ஆனால், "களப்ஹ" என்ற சொல் பாலிமொழியிலிருந்து கண்டு கொண்டோம் ஆதலின், இதற்குத் தமிழில் சொல்லாக்க விதிகளைத் தேடி அலையத்தேவையில்லை. அது மட்டும் அல்லாமல் பண்டைக் காலத்தில், கள்வர், குறுநிலத் தலைவர்