பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டின் பிற்காலப் பாடல்கள்

321


வாய்த்த திருவாக, இயல்பாக வெளிப்பட்டு எழுத்துருவம் பெற்றன அல்ல; மாறாக, அரிஸ்டாட்டில் ஹொராஸ் ஆகியோரின் செய்யுள் விதிமுறைகளை அடியொற்றிப் பின் பற்றிப் பாடப்பட்ட, பதினேழாம் நூற்றாண்டுப் பிரென்சு மொழி இலக்கிய நாடகங்கள் போலப் பாடப்பெற்றுள்ளன. இவ்வாறு கூறுவதால், பழைய தமிழ்ச் செய்யுட் பேரொளி மங்கிவிட்டது என்பது இல்லை ; அது, அந்தப் பழைய பேரொளியோடு ஒளிவிடத்தான் செய்கிறது ; ஆனால், கவிதைக்கலை, திறனாய்வாளரால் போலியாக்கப் பட்ட ஆட்சிப் பிடியின்கீழ் மெல்ல நகருகிறது. இது அடுத்து வரும் பகுதிகளில் விளக்கப்படும்.

நெடுநல்வாடை :

உரையாசிரியர் நச்சினாக்கினியர் கூற்றுப்படி, இப்பாடல், நெடுஞ்செழியன் புகழ்பாட நக்கீரரால் பாடப்பட்டது. ஆனால், அப்பாட்டின் மூலத்தில் அவ்வரசன் பெயர் குறிப்பிடப்படவில்லை. இப்பாட்டின் பாட்டுடைத்தலைவன், "பகைவர் பலரோடு பகைகொண்டு பாசறைக்கண் இருக்கும் போது, இரவின் நடு யாம்த்தும் உறக்கம் கொள்வது மறந்து, ஏவலர்சிலர் பின்வர, அப்பாசறைக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வரும் ஒரு வேந்தன்"

"நன்ளென் யாமத்தும் பள்ளிகொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்

பலரொடு முரணிய பாசறைத் தொழிலே."
- நெடுநல். 186-188.

முனையில் வேப்பிலை கட்டப்பெற்ற, வலிய கொம்பிலே கோக்கப் பெற்ற வேற்படை ஏந்திவருவன். "வேப்பு தலையாத்த நோன்காழ் எஃகமொடு" (நெடுநல் : 176) கூறிய விளக்கங்களிலிருந்து, நெடுநல்வாடையின் பாட்டுடைத் தலைவன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆவன் என்பது, ஒரு முரட்டுத்தனமான முடிவு

த.வ. II-11