பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

தமிழர் வரலாறு


பற்றியிருக்கவும், குளிர்மிகுதியால், பற்பறை கொட்டி நடுங்க, விலங்குகள் தம் மேய்தல் தொழிலை மறக்க, குரங்குகள் உடல் குன்னிக்கிடக்க, மரத்தில் படிந்துகிடக்கும். பறவைகள், ஆங்கு இருக்க மாட்டாது கீழே வீழ்ந்து விட, கறவைகள், தம் கன்றுகளைப் பால் உண்ணவிடாது கடிந்து உதைக்க, குன்றையும் நடுங்கப் பண்ணுவது போலும் கூதிர் காலம்."

"வையகம் பனிப்ப, வலறேர்பு வளைஇப்
பொய்யாவானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்,
ஏறுடை இளநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்
நீடிதழ்க் கண்ணி நீர் அலைக்கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க,
மா மேயல் மறப்ப, மந்திகூரப்,
பறவை படிவன வீழக், கறவை
கன்று கோள்ஒழியக் கடியவீசிக்

குன்று குளிர்ப்பன்ன கூதிர்"
-நெடுநல்வாடை 1 - 11

இதோ ஒரு பனிக்காலக்காட்சி : "மெல்லிய கொடியினையுடைய முசுட்டைச்செடியின் பருத்தவடிவினவாகிய வெண்ணிறப்பூக்கள், பொன் போன்ற நிறமுடைய பீர்க்கம் பூக்களோடு, சிறுசிறு துாறுகள் தோறும் மலர்ந்துகிடக்க, பசியகாலையும் மெல்லிய சிறகையும் உடைய கொக்குக் கூட்டம், வண்டல் இட்ட கரிய சேறுபடிந்த, வெள்ளிய ஈர மணற்பரப்பில், சிவந்த வாயினவாய நாரைகளோடு கூடி இருந்து, எல்லா இடங்களிலும் கவர்ந்து கொள்ளுவதற்கு வாய்ப்பாக கயல்மீன்கள், நிலத்தில் அறல்பட ஓடும் வெள்ளத்தை எதிர்த்து ஏறிவர பெரும் பெயல்பெய்து ஓய்ந்து விட்டமையால், வானில் உயர்ந்து எழுந்துவிட்ட, நீர்அற்ற