பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டின் பிற்காலப் பாடல்கள்

327


இப்பாட்டிலிருந்து, பண்டைத் தமிழர் வாழ்க்கையோடு தொடர்புடைய இனிய பல செய்திகளை அறிந்து கொள்கிறோம். எதிர் காலத்தை அறிந்து கொள்ளும் தமிழர் வழக்கம், சிற்றுாரின் புறத்தே சென்று, ஆங்குள்ளார் வாயினின்றும் எதிர்பாரா நிலையில் வெளிப்படும் சொற்களைக் கொண்டு வருவதை உணர்ந்து கொள்வதாம். "சிறந்த காவல் அமைந்த பழைய ஊரின் புறத்தே சென்று, யாழ் இசைபோலும் இனிய ஒலி எழுப்பும் வண்டுகள் வந்து மொய்க்குமாறு, நாழியில் கொண்டு சென்ற நெல்லோடு அன்று அலர்ந்த முல்லை மலர்களையும் தூவி, மிக முதிர்ந்த பெண்டிர், நற்சொல் கேட்டு நிற்க, சிறிய கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்றின், பால் உண்ணாத் துயரால், தாய் வருகையை எதிர்பார்த்து வருத்தும் வருத்தத்தைப் பார்த்து, இடையர் குடிவந்த ஒருத்தி, குளிரால் நடுங்கும் தோளினை இருகையாலும் இறுக அனைத்துக்கொண்டும், அக்கன்றை நோக்கி, "கையில் வளைந்த கோலேந்திய கோவலர் பின் இருந்து துரத்திவர, உன்னுடைய தாய் இப்பொழுதே வந்து விடுவள்" எனக் கூறினவருடைய மிக நல்ல சொல்லைக் கேட்டோம். ஆகவே, நல்லோர் கூறிய வாய்ப்புள் (சகுணம்) ஒன்றாகவே உளது. ஆகவே, பகைவர் மண்ணைக் கைக் கொண்டு, அப்பகைவர் பணிந்து தரும் திறைப்பொருட்களைக் கொண்டு, சென்ற வினைமுடித்துக்கொண்டு, நின் கணவர், இன்றே வருதல் உறுதி" என்ற பகுதியினைக் காண்க:

"அருங்கடி மூதூர் மருங்கிற்போகி,
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு
நாழி கொண்ட நறுவி முல்லை
அரும்பு அவிழ் அலசி துாஉய்க், கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்
சிறுதாம்பு தொடுத்த பசலைக்கற்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்ம்கள்