பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328

தமிழர் வரலாறு


நடுங்கு சுவல் அசைத்த கையள், கைய
கொடுங்கோல் கோவலர் பின் நின்று உய்த்தர
இன்னே வருகுவர் தாயர் என்போள்
நன்னர் நன்மொழிகேட்டணம் : அதனால்,
நல்ல, நல்லோர் வாய்ப்புள் : தெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர், வினைமுடித்து

வருதல் தலைவர் வாய்வது".
-முல்லை : 7 - 20.

முல்லைப் பாட்டின் ஆசிரியர், இயற்கை நலத்தை, ஏனைய புலவர்களைப் போலவே நன்கு விளக்கியுள்ளார். "நுண்மணலிடத்தே முளைத்திருக்கும் இலைகளால் நிறைந்த காயாச்செடி, அஞ்சனவண்ண மலர்களை மலர்ந்து காட்ட இளந்தளிர்களையும், மலர்க்கொத்துக்களையும் உடைய கொன்றைமரம். நல்ல பொன் ஒத்த மலர்களைச் சொரியவும், வெண்காந்தளின் குவிந்து இருந்த அரும்புகள், விரிந்த கை போல விரிந்து காட்டவும், நெருங்கிய இதழ்களைக் கொண்ட செங்காந்தள், உதிரம் போலும் நிறம் வாய்ந்த மலர்களை ஈனவும், காட்டு வளத்தால் செழித்த முல்லை நிலத்துப் பெருவழிகளில், மழை பொய்யாது பெய்தமையால் நன்கு வளர்ந்து, முற்றித் தலைசாய்ந்து கிடக்கும் வரகுக்கொல்லைகளில், முறுக்குண்ட கொம்புகளைக் கொண்ட கலைமான்களோடு, மடப்பம் வாய்ந்த பெண்மான்களும் துள்ளி விளையாட, இனிமேல் பெய்வதற்காக விரைந்த செல்லும் வெண்முகில் மழைபெய்தற்குரிய கார்காலம்."

"அயிர
செறிஇலைக் காயா அஞ்சனம் மலர,
முறிஇணர்க் கொன்றை நன்பொன் காலக்,
கோடல் குவிமுகை அங்கை அவிழத்
தோடார் தோன்றி குருதி பூப்பக்
கானம் நந்திய செந்நிலப் பெருவழி