பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டின் பிற்காலப் பாடல்கள்

329


வானம் வாய்த்த வாங்குகதிர் வரகின்
திரிமருப்பு இரலையொடு மடமான் உகள

எதிர் செல் வெண் மழை பொழியும் திங்கள்."
-முல்லை : 92-101.

மன்னர்கள் பாடி கொண்டிருக்கும் இடங்களில் ஒரு நாளின் ஒவ்வொரு நாழிகையும், பேரொளி வீசும் பெரிய மணிகள், அவற்றின் நாக்கால் அடிபட எழுப்பு ஒலியால் அறிவிக்கப்படும் : நாழிகை குறுநீர்க்கன்னல் என்ற காலம் காட்டும் கருவியால் கணக்கிடப்படும் என்பதையும் இப்பாட்டிலிருந்து அறிகிறோம்.

"நெடு நா ஒண்மணி நிழற்றிய நடுநாள்."

"குறுநீர்க் கன்னல் இனைத்து என்று இசைப்ப"
-முல்லை : 50; 58;

பாசறைக்கண் அரசன் உறங்கும் இடத்தில், மெய்க் காவலர்களாக, மிலேச்ச ஊமைகளே அமர்த்தப் பட்டனர் என்று அறிவிக்கிறது முல்லைப்பாட்டு.

"உடம்பின் உரைக்கும் உரையா நாவின்

படம்புகு மிலேச்சர் உழையர் ஆக."
-முல்லை : 65-66.

குறிஞ்சிப்பாட்டு :

உரையாசிரியர் நச்சினார்க்கினியர், குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தற் பொருட்டுக் கபிலரால் பாடப்பட்டது என்று கூறியுள்ளார். இக்குறிஞ்சிப் பாட்டு, ஒரு கடவுளையோ அல்லது ஓர் அரசனையோ அல்லது தமிழ் வளரத்துணை நின்ற ஒருவனையோ பாராட்டப் பாடப் பெறாமல், குறிஞ்சித் திணைபற்றிய, தொல்காப்பிய இலக்கணத்துப் பெரும்பாலான விதிமுறைகளுக்கு விளக்கம் தரவே பாடப்பெற்றுளது. ஆகவே அவ்வுரையாசிரியர் கூற்று