பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

தமிழர் வரலாறு

உண்மையாதலும் கூடும். இதுகாரும் நாம் ஆராய்ந்த பாடல்களெல்லாம், அவை, பாட்டினத்தின் எந்த இனத்தைச் சேர்ந்தன வாயினும், தம் தலையாய பணியாக யாரேனும் ஒருவரைப் பாராட்டிப் பாடவே வந்துள்ளன. பாட்டிலக்கணம் பற்றி, எங்கோ சில இடங்களில் மட்டுமே குறிப்பிட்டுச் செல்கின்றன. இலக்கணத்தைப் பொருள் வி ள க் க அறிவியலாகக் கொள்ளாமல், விதிமுறை கட்டுப்பாட்டிற்குரிய அறிவியலாகக் கொண்டு, இலக்கண ஆசிரியர் விதிக்கும் விதிமுறைகளுக்கு அடங்கி பாடப்பெற்ற முதல் பாடலும், மிக நீண்ட பாடலும் இதுவே. இக்காலத்திற்குப் பிறகும் எண்ணற்ற பாடல்கள் பாடப்பெற்றன. ஆனால் அவையெல்லாம், புலவர்களின் ஒள்ளொளி காட்டிய வழிப், பாடப்பெறாமல், அகத்தியம் அல்லது தொல்காப்பியத்தைப் பாட்டிற்கு வகுத்த வழிகாட்டியாகக் கொண்டே பாடப் பெற்றுள்ளன.

இப்பாட்டு, பெரும்பாலும், ஆறாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தைச் சேர்ந்ததாகும். ஆரியக் குறிப்பீடுகள் இதை உறுதி செய்வதற்குப் போதுமான அளவு மிகுதியாகவே உள்ளன. "ஐயம் அறக்கற்ற அறிவுடையராகிய ஐயர்க்கும் [அதாவது ரிஷி, அல்லது துறவி ; பிற்காலத்தே, எல்லா பிராமணர்களையும் குறிப்பதாயிற்று]. அவர்கள், தங்கள் சான்றாண்மை, பெருமை, ஒழுக்கங்களை, ஒரு முறை இழந்து விடுவராயின், பின்னர், அதனால் உண்டாகிவிட்ட அழுக்கைப் போக்கிவிட்டு, உலகெங்கும் விளங்கும் புகழ் உடையராம் அப்பழைய நிலயை அடைதல், அரிதே அல்லது எளிதன்று எனக் கூறுவர், பழைய ஒழுக்க நெறிகளை உணர்ந்த உயர்ந்தோர் எனக் கூறுகிறது ஒருபகுதி :

"சால்பும், வியப்பும், இயல்பும் குன்றின்
மாசறக் கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்
ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை

எளிய என்னார் தொன் மருங்கு அறிஞர்".
- குறிஞ்சி : 15 - 18: