பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டின் பிற்காலப் பாடல்கள்

331


இது, இப்பாட்டு பாடப் பெற்ற காலத்தில், ஆரிய நாற்சாதி முறைகளும், ஆரிய தர்ம சாஸ்திரங்களும், தமிழரின் வாழ்க்கை முறைகளை நடத்திச் செல்லும் வழிகாட்டிகளாகிவிட்டன என்பதை உணர்த்துகிறது."ஒரு தலைவி, அடுத்த உலகத்தில் அதாவது அடுத்த பிறவியில், காதலனை அடைவேன்" "ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு" (வரி : 24) எனக்கூறும் இடத்தில், ஆரியரின் மற்றொரு கோட்பாடு குறிப்பிடப்பட்டுளது. குறிப்பிடப்பட்டுள்ள பிறிதொரு ஆரியக் கோட்பாடு, பார்ப்பனரின் அந்தி வழிபாடு. "அந்தி அந்தணர் அயர" (வரி : 235) "நீரால் நிறைந்த பெரிய கடலும் குறைந்து போகுமாறு அதன் நீரை முகந்து கொண்டு, அகன்ற பெரிய வானில், வீசுகின்ற காற்று தன்னோடு கூடியதனால், போர் முரசு முழங்கினாற் போலும், இனிய குரலை உடைய இடியேற்றோடு, நிரல் நிரலாக எழுந்து இயங்கும் கார்முகில்" எனப்புலவர் கூறும் போது, வலிந்து பாடப் பெற்ற பிற்காலச் சமஸ்கிருதப் பாடல்களின் ஆதிக்கத்தின் கீழ்த் தமிழ்ப் பாக்களைப் பற்றிக் கொண்ட உயர்வு நவிற்சி அணியின் நிழலாட்டம் நன்கு காணப்படுகிறது:

{{left margin|3em|

"நிறை இரும் பெளவம் குறைபட, முகந்து கொண்டு
அகல் இரு வானத்து வீசுவளி கலாவலின்
முரசு அதிர்ந்தன்ன இன்குரல் ஏற்றொடு

நிரைசெலல் நிவப்பின் கொண்மூ."
-குறிஞ்சி : 47 - 49.
}}

பாட்டிலக்கண விதிகளுக்கு விளக்கம் அளிக்கும் ஒரு பாட்டு இது என்ற காரணத்தால், பாடலாசிரியர், முழுக்க முழுக்க, ஒரு மலர்ப் பண்ணையாளர் வைத்திருக்கும் மலர்களின் பெயர்ப் பட்டியல் போல, முழுக்க முழுக்க, செய்யுள் நடைசாராத, குறிஞ்சி நிலத்துக்கு உரிய, ஒரு நூறு மலர்களின் பெயர்ப் பட்டியலைக் கொடுத்துள்ளார். புலவர், உ ண் மை யா ன, இயற்கையோடு ஒட்டிய கவிபாடும் உள்ளொளியில் குறையுடையார் அல்லர் , மாலைக் காலம்