பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332

தமிழர் வரலாறு


குறித்த அவர் விளக்க உரையினைக் காண்க : "பகற்பொழுது கழியுமாறு பலகதிர்களைக் கொண்ட ஞாயிறு, ஏழு குதிரை பூண்ட தேரை செலுத்தி, மேற்குமலையை அடைந்து மறைய, மான்கூட்டம் மரத்தடிகளில் வந்து கூட, பசுக் கூட்டம் தம் கன்றுகளை அழைத்தவாறே மன்றுகள் நிறையுமாறு சென்று நுழைய, கொம்பின் இசைபோல ஒலி எழுப்புவனவாகிய வளைந்த வாயையுடைய அன்றில் பறவை, உயர்ந்த பனைமரத்தில் இருந்தவாறே தம் பெடையை அழைக்க, பாம்பு இரை மேய்தற்கு வேண்டும் ஒளிதரும் பொருட்டு, தன்பால் உள்ள மணியை உமிழ, இடையர்கள், ஆம்பல் என்னும் இசை எழுப்பவல்ல தம் குழலில் தெளிந்த இசையைத் தொடர்ந்து எழுப்ப, ஆம்பல் அழகிய இதழ் விரித்து மலர, செல்வம் கொழிக்கும் மனைகளில் அழகிய தொடி அணிந்த மகளிர் விளக்கேற்றி வைத்து மாலையை வழிபட அந்தணர், தம் அந்திக்கடனை ஆற்ற, காட்டில் வாழ்பவர், வானத்தை அளாவும் பரண்களில் தீக்கடைக் கோளால் தீப்பந்தங்களைக் கொளுத்த, கார் முகில்கள் பெரிய மலைமுகடுகளைச் சூழ்ந்து கிடந்து கறுக்கவும், காடு, விலங்குகள் எழுப்பும் கல் என்னும் ஒலியால் நிறைய, பறவைகள் ஆரவாரம் செய்ய"

"எல்லை செல்ல, ஏழ் ஊர்பு இறைஞ்சிப்
பல்கதிர் மண்டிலம் கல்சேர்பு மறைய,
மான்கணம் மரம்முதல் தெவிட்ட, ஆன்கணம்
கன்று பயிர்குரல மன்றுநிறை புகுதர,
ஏங்கு வயிர் இசைய கொடுவாய் அன்றில்
ஓங்கிரும் பெண்ணை அகமடல் அகவப்,
பாம்பு மணி உமிழப், பல்வயின் கோவலர்
ஆம்பலந் தீங்குழல் தெள்விளி பயிற்ற,
ஆம்பல் ஆய்இதழ் கூம்புவிட, வளமனைப்
பூந்தொடி மகளிர் சுடர் தலைக்கொளுவி
அந்தி அந்தணர் அயரக், கானவர்

விண்தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த,