பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டின் பிற்காலப் பாடல்கள்

333


வானம் மாமலை வாய்சூழ்பு கறுப்பக், கானம்

கல் என்று இரட்டப், புள்ளினம் ஒலிப்ப"
-குறிஞ்சி : 215-228.

புலவரின் புலமை நலத்தைக் காட்ட அழகிய இரு செய்யுள் ஓவியங்கள் ஈண்டு எடுத்துக் காட்டப்பெறும். "பொன்னில் அழுத்திய நீலமணிபோல, சிறிய முதுகிடத்தே தாழ்ந்து கிடந்த, பின்னி விடப்பட்ட கருங்கூந்தல்"-"பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின் இருங்கூந்தல்" (வரி : 59-60). "பகைவரின் டோர்க்க ளத்தைப் பாழ்செய்யும், பகைவரால் அணுகுதற்கு இயலாப் பேராற்றல் வாய்ந்து, பகைவர்களைப் புறமுதுகு காட்டப் பண்ணும், பலவேற் படைகளையுடைய போர் மறவர்களைப் போல, மிக்க சினத்தால் செருக்குற்று, தம்மை நெருங்குந்தோறும் சினக்கும் இயல்புடைய, மூங்கில் முளை போலும் பற்களை உடைய, கூரிய பெரிய நகங்களைக் கொண்ட நாய்கள், கண் இமைக்காது எம்மை வளைத்துக் கொண்டு நெருக்கிவர".

"முனைபாழ் படுக்கும் துன்னரும் துப்பின்
பகைபுறம் கண்ட பல்வெல் இளைஞரின்
உரவுச்சினம் செருக்கித், துனனுதொறும் வெகுளும்
முனைவாள் எயிற்ற வள் உகிர் ஞமலி

திளையாக் கண்ண வளைகுடி நெரிதர."
-குறிஞ்சி: 128-182:

மலைபடுகடாம் :

பத்துப் பாடல்களிலும் இனிய ந்யம் வாய்ந்தது மலைபடுகடாம். அதாவது, யானையின் மத்தகத்திலிருந்து கசிந்து வரும் மதநீர் போல் யானை போல் காட்சி தரும் மலையிலிருந்து எழுந்து வரும் பல்வேறு ஒலிகள். மலைக் காட்சி பற்றிய அதன் விளக்கம், பிறர் எவராலும் மிஞ்ச முடியாதது. பெருங்கெளசிகனார், நன்னன் புகழ் பாட, அதை இயற்றியுள்ளார்; ஆனால், நன்ன்னுக்கு உரிய