பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338

தமிழர் வரலாறு

குரல் எழுப்பும் அம்மலையில், மழைவளத்தைக் குறைவறப் பெற்று. வழிப்போகும் கூத்தருடைய மத்தளங்கள், அவர் தோளிலிருந்து தொங்குவது போல, பழுத்துத் தொங்கும் கணிகளைக் கொண்டிருந்தது பலா.

"அகல் இரு விசும் பின் ஆஅல் போல
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை;
நீலத்தன்ன விதைப்புனம் மருங்கின்
மகுளிபாயாது மலிதுளி தழாலின்
அகளத்தன்ன நிறை சுனைப் புறவில்
கெளவை போகிய கருங்காய் பிடிஏழ்
நெய்கொள ஒழுகின பல்கவர் ஈர்எள் :
பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்பக்
கொப்பதம் முற்றின குவவுக்குரல் ஏனல்;
விளைதயிர்ப் பிதிர்வின் வீஉக்கு இருவிதொறும்
குளிர்புரை கொடுங்காய் கொண்டன அவரை :
மேதியன்ன கல்பிறங்கு இயவில்
வாதி கையன்ன கவைக்கதிர் இறைஞ்சி
இரும்பு கவர்வுற்றன. பெரும்புன வரகே :
பால்வார்பு கெழீஇப் பல்கவர் வளிபோழ்பு
வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல்
வேல் ஈண்டு தொழுதி இரிவுற்றென்னக்
காலுறு துவைப்பின் கவிழ்க்கனைத்து இறைஞ்சிக்
குறையறை வாரா நிவப்பின் அறையுற்று
ஆலைக்கு அலமரும் திங்கழைக் கரும்பே;
புயல்டினிறு போகிய பூமலி புறவின்
அவல்பதம் கொண்டன அம்பொதித் தோரை :
தொய்யாது வித்திய துளர்படு தடவை

ஐயவி அமன்ற வெண்கால் செறுவின்