பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342

தமிழர் வரலாறு


பிள்ளைகளே போன்றதும் ஆகியமந்தி, மகளிருடைய பற்கள் போலும், முத்துக்களை வாளின், வாய்போலும் வாயை உடைய கிளிஞ்சிலின் வயிற்றகத்தே இட்டு, மெலிந்த இடையினையும், தோளையும் முதுகையும் மறைக்குமளவு நீண்டு, ஐந்து பகுதியவாகப் பின்னிவிடப்பட்ட கூந்தலையும் உடைய உப்பு வணிகரின் மனைவியர் பெற்ற, நல்ல அணிகளை அணிந்த பிள்ளைகளோடு கிலுகிலுப்பை ஆடும், ஓயாது அலையும் கடலை எல்லையாகக் கொண்ட கொற்கை மன்னனுக்கு உரிய தென்னாடு" அதாவது பாண்டியர்க்கு உரிய நாடு:

"நறவுவாய் உறைக்கும் நாகுமுதிர் துணவத்து
அறைவாய்க் குறுந்துணி அயில்உளி பொருத
கைபுனை செப்பம் கடைந்த மார்பின்
செய்பூங்கண்ணி செவிமுதல் திருத்தி
நோன்பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த
மகாஅர் அன்னமந்தி, மடவோர்
நகாஅர் அன்ன நளிநீர் முத்தம்
வாள்வாய் எருந்தின் வயிற்றகத்துஅடக்கி,
தோள்புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின்
உளரியல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற
கிளர்பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும்
தத்துநீர் வரைப்பின் கொற்கைக் கோமான்

தென்புலம்."
- சிறுபாண் : 51 - 63.

நல்ல நீர் நிறைந்த பொய்கையின் கரையில் வளர்ந்து நிற்கும் கடம்பமரத்தின், மாலைதொடுத்தாற்போல் மலர்ந்திருக்கும் மலர்கள், ஓவியத்தில் தீட்டினாற்போலும் அழகு வாய்ந்த நீர் உண்ணும் துறைக்குப் பக்கத்தில் இந்திரகோபம் போலும் சிவந்த மகரந்தத்தாதை உதிர்ப்பதால், இளமுலை போலும் வடிவடைய பெரிய அரும்பு, மகளிர் முகம் மலர்ந்தாற்போல மலர்ந்த அழகிய தாமரையின், இயல்பாகவே