பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டின் பிற்காலப் பாடல்கள்

343


சிவந்திருக்கும் அழகிய கையில் சாதி விங்கத்தைத் தேய்த்தாற்போல, இயல்பாகவே சிவந்திருக்கும் தம் மீது, கடப்பமலரின் செந்தாதும் படியவே, மேலும் சிவப்புற்ற இதழ்களால் குழப் பெற்ற, செம்பொன்னால் செய்தது போலும் அத்தாமரைக் கொட்டையின் மீது, தன் உயிர்க்குக் காவலாகிய இனிய பெடையைத் தழுவியவாறே, சிறகுகளை அசைத்து அழகிய தும்பி சீகாமரம் என்னும் பண்ணின் இசை போல ஒலி எழுப்பும், மருதவனம், சூழ்ந்த, தாம் பிறந்த மண்ணை விட்டுப் பிரிந்தறியாக் குடிமக்களைக் கொண்ட குணபுலம்," அதாவது சேரநாடு.

"நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த
துறுநீர்க் கடம்பின் துணையார் கோதை
ஓவந் தன்ன உண்டுறை மருங்கிற்
கோவத்தன் கொங்கு சேர்பு உறைத்தலின்,
வருமுலை அன்ன வண்முகை உடைந்து
திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை
ஆசில் அங்கை அரக்குத் தோய்ந் தன்ன
சேயிதழ் பொதிந்த செம்பொன் கொட்டை
ஏம இன்துணை தழீஇ இறகு உளர்ந்து
காமர்தும்பி காமரம் செப்பும்
தண்பணை தழீஇய தளரா இருக்கைக்

குணபுலம்,"
- சிறுபாண் : 88 - 79:

ஏனைய வருணனைகள், ஈண்டு எடுத்துக்காட்ட வேண்டா அளவு நுண்ணியவாம். இக்குறு நிலத்தலைவனுக்கு உரிய நகரங்களில், வேலூரும் ஒன்றும் ஆதலின், அவன் ஆட்சிபுரிந்த நிலப்பரப்பு, இன்றைய வடார்க்காடு மாவட்ட அளவினதாதல் கூடும்.

திருமுருகாற்றுப்படை :

இத்தொகை நூலில், புலவர்களுக்கான மூன்று ஆற்றுப்படைகள் போல, திருமுருகாற்றுப் படை, முருகன் கோயில்