பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348

தமிழர் வரலாறு


குறவர், நீண்ட மூங்கிவில் இட்டுப் புளிப்பேறப் பண்ணிய உள் தெளிவை, மலையிடத்துச் சிற்றுாரில் உள்ள தம் சுற்றத்தினரை எல்லாம் அழைத்து அவரோடு இருந்து உண்டு மகிழ்ந்து, தொண்டகம் எனும் சிறுபறையின் ஒலிக்கு ஏற்பக் குரவைக்கூத்து ஆடாநிற்க, மலரும் பருவத்துப் பேரரும்பைப் பறித்து விரலால் அலைத்து மலர்த்தினமையால், தனக்கு உரியதல்லாத வேறுபட்ட மணம் நாறும், ஆழ்ந்த சுனையில் பூத்த மலர்களால் ஆன, வண்டுகள் வந்து மொய்க்குமளவு தேன் நிறைந்த தலைமாலையினையும், தொடுக்கப்பட்ட மாலையினையும், பின்னி விடப்பட்ட கூந்தலையும் உடையராய் இலையோடு கூடிய கஞ்சங்குல்லை, நறுமலர்க் கொத்துக்களையும், சிவந்த அடியினைக் கொண்ட மராமரத்து வெண்மலர்க் கொத்துக்களையும் இடைஇடையே இட்டு, வண்டுகள் வந்து தேன் உண்ணும்படி தொடுத்த, குளிர்ந்த, அழகிய தழை ஆடையை இடையில் உடுத்து, மயில் போலும் சாயல் உடைய இளைய மகளிரோடு, சிவந்த திருமேனியும், ஆடையும், உடையனாய், அடிசிவந்த அசோக மரத்தின் இளம் தளிர் அணிந்த காதும், அரையில் காதும், காலில் வீரக்கழலும், தலையில் வெட்சியாலான மாலையும் உடையனாய், குழல், கொம்பு, வேறுபல சிறிய இசைக்கருவிகளை இயக்கவல்லனாய் ஆட்டுக்கிடாய். மயில்களை ஊர்தியாகவும், கோழியைக் கொடியாகவும் கொண்டவனாய், நெடிதுயர்ந்த திருமேனி உடையவனாய், தொடி அணிந்த தோளினனாய், நரம்பிசைக் கருவிகள் பல ஒன்று கூடி இசைத்தால்போல், இன்னிசை எழுப்பவள்ள மகளிரோடும், இடையில் உடுத்து, நிலத்தளவும் தொங்கும் ஆடையுடையனாய், முழவு போல் பருத்த தன் கைகளால், மெல்லிய தோளையுடைய மான்பிணைபோலும் மகளிரைத் தாங்கித் தழுவிக் கொண்டு, அவர்களின் ஆட்டத்திற்கு ஏற்ப இருகை கொடுத்து மலைகள்தோறும் சென்று விளையாடுதல் அவனின் தலையாய பண்பு"

பைங்கொடி நறைக்காய் இடையிடுபு, வேலன்
அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு