பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை நூற்றிஐம்பது

359


யாகும்படி, அவ்வழியெங்கும் உதிர்ந்து கிடந்து, நெரும்பைக் கக்குவது போலும் கடிய வெப்பம் மிக்க வழியில், உன்னை மறந்து வாழமாட்டாப் பெருவேட்கை உடையளாகிய இவள், ஈங்கிருந்து இறந்து போக விடுத்துப் பிரியத் துணிந்தீர்."

"தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக
அடங்காதார் மிடல்சாய, அமரர் வந்து இரத்தவின்,
மடங்கல் போல் சினைஇ, மாயம் செய் அவுணனைக்
கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின்,
சீறரும் கணிச்சியோன் சினவலின், அவ்வெயில்
ஏறு பெற்று உதிர்வன போல், வரைபிளந்து, இயங்குநர்
ஆறுகெட விலங்கிய அழில் அவிர் ஆரிடை
மறப்பரும் காதல் இவள் ஈண்டு ஒழிய

இறப்பத் துணிந்தனிர்."
-பாலைக்கலி : 1 : 1-10

ஆரிய வழிபாட்டு நெறியை அடிப்படையாகக் கொண்ட ஓர் உவமையும் வந்துளது. "என் நெஞ்சு, கற்று கேட்டறிந்த அந்தணர்கள் விரும்பி மேற்கொள்ளும் வேள்வியிடை எழும் புகைபோல் நெட்டுயிர்ப்புக் கொள்ளா நிற்கும்" "கேள்வி அந்தணர் கடவும் வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சு" (பாலைக்கலி 35 : 25-26).

இவ்வகைப் பிறிதொரு உவமை வருமாறு: "இமய மலையில் பிறந்த மூங்கிலாகிய வில்லை வளைத்த, கங்கையுடைமையால் ஈரம் பொருந்திய சடையினை உடைய இறைவன், இறைவியோடு உயர்ந்த கயிலை மலையில் இருந்த போது, பத்துத் தலைகளையுடைய அரக்கர் தலைவனாகிய இராவணன், அம்மலையை எடுப்பதற்காகக் கைகளைக் கீழே கொடுத்துத், தொடி அணிந்த கைகளால் அதை எடுக்க மாட்டாது வருந்துவது போல"-