பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை நூற்றிஐம்பது

365


மலர்கள் எல்லாம், துயில் கொண்டு விட்டன போல், குவிந்து போக, உலகனைத்தும், ஒருசேர நடுக்கம் உற்று, அச்சங்கொள்ள, உலக ஒடுக்கம் உண்டாகிவிட்டதோ என்பது, போலும் இராக்காலம் தோன்றுவதற்கு முன் பாகவரும் பிரிந்துறைவார்க்குப், பெருந்துயர் தரும் மாலைக்காலம்."

"மல்லரை மறம்சாய்த்த மலர்தண்தார் அகலத்தோன்
ஒல்லாதார் உடன்றுஓட உருத்து உடன்று எறித்தலின்
கொல்யானை அணிநுதல் அழுத்திய ஆழிபோல்
கல்சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின்,
இருங்கடல் ஒலித்து ஆங்கே இரவுக் காண்பது போலப்
பெருங்கடல் ஓதநீர் வீங்குபு கரைசேரப்,
போஒய வண்டினால் புல்என்ற துறையவாய்ப்
பாயல் கொள்பவை போலக், கயமலர் வாய்கூம்ப,
ஒருநிலயே நடுக்குற்று இவ்வுலகெலாம் அச்சுற

இருநிலம் பெயர்ப்பு அன்ன எவ்வம்கூர் மருண்மாவை."
-நெய்தற்கவி : 17 " 1 - 10.

உலக்கைப் பாட்டு :

கபிலர் பாடிய குறிஞ்சிக் கலியில், வள்ளைப் பாட்டிற்கான சிறந்த ஓர் எடுத்துக்காட்டு இடம் பெறிலுளது வள்ளைப் பாட்டாவது, நெல், தினைபோன்றவற்றை, மர உரவில் இட்டுத் தம் கை உலக்கையால் மாறி மாறிக்குற்றும் மகளிர் இருவர், தொடர்ந்து மேற்கொள்ளும் அப்பணி தரும் தளிர்ச்சியைத் தணித்துக் கொள்வான் வேண்டிப், பாட்டும், எதிர்ப்பாட்டுமாக மாறி மாறிப் பாடும் பாட்டு, குறமகளிர், உரலாகப் பயன்படும் பாறை மீதான குழியில் தினையை இட்டு, மலைமீது வளர்ந்த மரத்தின் முற்றிய வயிரமாம் உள்ளிடு மரத்தில் செய்த உலக்கை கொண்டு குற்றுவர்: கற்காலம் தொட்டு வரும் இவ்வழக்கம் இலக்கியமாக்கப்பட்டு, குறிஞ்சிப் பாட்டின் ஒரு நிகழச்சியாகத் தலைவியும் அவன் தோழியரும், தலைவனின் புகழைப் பாடவும், அது அழித்துப்