பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/390

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

380

தமிழர் வரலாறு

“கேடு வருவதன் முன்னர், அது வராதவாறு தடுத்துத் தன்னைக் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை, அக்கேடு வந்துற்றதும், தீயின் முன்னே கிடக்கும் வைக்கோற் போர் கண நேரத்தில் எரிந்து இல்லாதல் போல் அறவே அழிந்து போகும்.”

“வரும்முன்னர்க் காவாதான் வாழ்க்கை, எரிமுன்னர்
வைத்துாறு போலக் கெடும்”

-குறள். 435


“உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும், வானிலிருந்து பெய்யும் மழையை எதிர்பார்த்தே வாழும்: ஆனால், ஒரு நாட்டின் குடிமக்கள், அந்நாட்டு அரசனின் செங்கோல் ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்ந்திருப்பர்.”

“வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம்; மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி:”

--குறள் : 542.


“கற்றுப் பெற்ற நூல் அறிவைப், பிறர் நன்கு உணர்ந்து கொள்ளும் வண்ணம் விரித்து உரைக்க இயலாதவர். கொத்துக் கொத்தாக மலர்ந்திருந்தும் மணம் வீசாத மலர்களுக்கு ஒப்பாவர்.”

“இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர்; கற்றது
உணர விரித்துஉரையா தார்”

--குறள் : 650,


“காமமானது, காதலர் இருவர் ஒன்று கூடிய வழி பிறக்கும் பேரின்பம் கடல் போல் பெரிதாம்; காதலர் இருவர் பிரிந்து கிடக்கும் போது, அக்காமம் தரும் துன்பம், அக்கடலினும் பெரிதாம்,”

“இன்பம் கடல்மற்றுக் காமம்; அஃதுஅடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.”

--குறள் 1166,


திருக்குறள், பெருமளவில், முப்பால், (த்ரிவர்கம்) வாழ்க்கையின் மூன்று குறிக்கோள் என்றே அழைக்கப் பெறுகிறது. சமஸ்கிருத தர்ம, அர்த்த, காம என்பனவற்றின்