பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

381

தமிழ் மொழிபெயர்ப்பாகிய அறம், பொருள், இன்பம் என்ற வரிசையில், அது மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுளது: தமிழ் இலக்கியங்களில், திருவள்ளுவர் காலத்துக்கு முன்னர், ஒழுக்க நெறி கற்பிக்கும் பாக்கள் இடம் பெறவில்லையாதலின் முதல் இரு பால்களை எழுதும் நிலையில், ஆசிரியர் சமஸ்கிருத சாஸ்திரங்களிலிருந்து பெருவாரியாகக் கடன் வாங்கியுள்ளார். நல்லொழுக்கம் ஆகிய அறம், தன் காதலன். பால் ஒர் இளம் பெண் கொண்டிருக்கும் மாறா அன்பு போல், மறைமுகமாகவே விளக்கப்பட்டுளது: அரசியல் அறிவு நெறியாம் பொருள். வளர்க்கப்படவேயில்லை. காதல் பற்றியதான மூன்றாம் பகுதியாம் காமத்துப் பாலில், திருமணத்திற்கு முந்திய காதல் வாழ்வும், பிந்திய காதல் வாழ்வுமாம் களவு, கற்பு நெறிகளுக்கு இடையிலான பழந்தமிழ் வேறுபாட்டினை விடாது பின்பற்றியிருப்பது மட்டுமல்லாமல், தொல்காப்பியர் விரித்துரைக்கும் காதல் வாழ்க்கையின் பழந்தமிழ்ச் செய்யுள் மரபினையும் பின்பற்றியுள்ளார். தமக்கு வேண்டும் பாடற் பொருளை, அவர் சமஸ்கிருதத்திலிருந்து கடன் வாங்கினாரா அல்லது பழந்தமிழ் மரபுகளைப் பின்பற்றினாரோ, பொருள் விளக்கமுறையில் தமக்கே உரிய தற்படைப்புத்திறனையும், நூலுக்குப் பெரும்புகழ் சேர்ப்பனவும், தமக்கே உரிமை யுடையளவுமான இடையறவு படாது எழும் கருத்துச் செல்வப் படைப்பினையும் வெளிப்படுத்தியுள்ளார். -

ஆரியக் கருத்துக்களின் அளவுக்கு மிஞ்சிய செல்வாக்கும், சமஸ்கிருதச் சொற்களின் கட்டுக்கடங்கா ஆட்சியும், நோக்கின், கி. பி. ஆறுக்கு முந்திய எந்த நூற்றாண்டையும் திருவள்ளுவர்க்குத் தருவது இயலாது. காதுவழிச் செய்திப்படி, பல்லவர் ஆட்சிக்குட்பட்ட நாட்டின் கடற்கரைப் பட்டினமாம் மயிலையில் (மதராஸ்) பிறந்தவர்: திருவள்ளுவர் உள்ளம் ஆரிய நாகரீகத்தில் அந்த அளவு ஊறித் தோய்ந்து போதல், தமிழ் நாட்டின் எஞ்சிய பகுதிகள், ஆரிய நாகரிகப் பிடியின் கீழ், அவர் காலத்திற்குச் சற்று முன்னரே வந்திருக்க, அவர் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே