பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

388

தமிழர் வரலாறு

அரசன், அமைச்சர்களோடு கலந்து ஆராய வேண்டும்’ என்கிறது பராசரன் விதிமுறை;

“யதஸ்ய கார்யம பிப்ரெதம் தத்ப்ரதி ரூபகம் மந்திரிணாஹ் ப்றெச்ஹெத்

கார்யமித மெவமாசீதெவம் வா யதி குர்யாத்”
—அர்த்தசாஸ்திரம் : நூல் 7 அதிகாரம் : 15

.

“தான் செய்ய மேற்கொண்ட ஒரு வினையின் ஆற்றல், அதைச் செய்து முடிக்க இருக்கும் தன் ஆற்றல், அதைச் செய்யவிடாது தடுத்து நிறுத்த முயலும் பகைவர் ஆற்றல், இருவர்க்கும் துணையாக வருவோர்களின் ஆற்றல் ஆகிய வற்றைச் சீர்தூக்கிப் பார்த்துத், தன் ஆற்றல் மிக்க வழியே. அவ்வினையைச் செய்க” என்கிறது குறள்.

“வினைவலியும், தன்வலியும், மாற்றான் வலியும்,

துணைவலியும் தூக்கிச் செயல்.”
--குறள்: 471:

“என்னுடைய படை ஒன்றினால், அல்லது துணைப்படைகளின் துணையால், பகைவரை அழிக்கப் போதிய ஆற்றல் என்னிடம் உளது: பகைவன் நிலை இதற்கு நேர் மாறானது என்பதை உணர்ந்து கொண்ட பின்னரே, ஒருவன் பகைநாட்டின் மீது படை எடுத்துச் செல்வன்” என்கிறார். கெளடல்யர்.

“யதி வா பஸ்யெத்...” ஸ்வதண்டயிர் மித்ராட வீ தண்டாயிர் வா ஸ்மம் ஜ்யாயம்ஸம் வா கர்ஸயிதுமுத்ஸஹெ....“ஸம்பன்னா மெ வர்த்தா விபன்னா பரஸ்ய”

—அர்த்த சாஸ்திரம் : புத்தகம் 7:4.

“அறம், பொருள், இன்பம், உயிர் அச்சம் ஆகிய இந்நான்கு உபாயங்களுக்கும் தேறி நிற்கும் ஒருவனே அரசியல் பணிக்குத் தேர்ந்து எடுக்கப்படுதல் வேண்டும்” என்கிறது திருக்குறள்.