பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

389

அறம் பொருள், இன்பம், உயிரச்சம் நான்கின்

திறம்தெரிந்து தேறப் படும்.
—குறள்: 501.

அரசியல் பணிக்கு ஒருவன் நியமிக்கப்படுமுன் இது போலும் தேர்வினைக் குறிப்பிடுகிறது அர்த்த சாஸ்திரம். அவையாவன தர்ம, அர்த்த, காம, பய.

“தர்மெசபதா அர்தொபதா காமொபதா பயொபதா” (விளக்கத்திற்கு அர்த்த சாஸ்திரம் புத்தகம். அதிகாரம் 10 காண்க).

“த்ரிவர்க பயசம்சுதானமா யான்ஸ்வெசு கர்மசு
அதிகுர்யாத்ய தாஸெளச மித்யா சார்யா

வ்யவஸ்தி தாஹ்”

“அரசியல் பணியாளன் நன்னெறியிலிருந்தது மாறுபடாதிருப்பின், உலகமும் மாறுபடாது. ஆகவே, அரசன், அப்பணியாளன் செயலை நாள்தோறும் ஆராய்ந்து பார்ப்பானாக” என்கிறது குறள்.

“நாள்தொறும் நாடுக மன்னன் வினை செய்வான்

கோடாமை கோடாது உலகு”.
—குறள் : 520.

“பல்வேறு தேர்வுகளை வைத்து ஒருவனைத் தேர்ந்து எடுத்துப் பணியில் வைத்து விட்ட பின்னர் அப்பணியாளன் நடவடிக்கைகளை, ஒற்றர்கள் மூலம் கண்காணிக்க வேண்டியது அரசன் கடமையாகும்” என்கிறது அர்த்த சாஸ்திரம்.


“தஸ்மாத் பாஹ்ய மதிஷ்டானம் க்ரித்வா கார்யெ சதுர்வித்ஹெ ஸெளசாஸெளசம் மா த்யாநாம் ராஜ மார்கெத கத்ரிப் ஹிப்”
-அர்த்த சாஸ்திரம்: நூல் :1:10