பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

391

க்ஷத்திரிய தர்மம் அழிந்து போகும்போது, ஆஸ்ரமவாகிகளின் கடமையும் மறைந்து போகும்” என்கிறது மகாபாரதம்.

“மஞ்செத்ரயீ தண்ட நீ தௌ ஹதாயாம்
ஸர்வெ தர்மாஹ் ப்ரக்ஸயெயுஸ் விருத்ஹாஹ்
ஸர்வெ தர்மாஸ்சாச்ரமானாம் ஹதாஸ்யுஹ்
க்ஷ்ரத்ரெ நஷ்டெ ராஜதர் மெ புரானெ”

—மகாபாரதம் சாந்திபர்வம் : 112 : 28.

“எக்காலத்தும் குறையாத விளையுளையும், ஆன்று அமைந்து அடங்கிய சான்றோர்களையும், என்றும் கெட்டு அறியாச் செல்வத்தையும் ஒருங்கே கொண்டதே நாடு எனப்படும். அளவிறந்த செல்வத்தைக் கொண்டிருப்பதால், பிற நாட்டவராலும் விரும்பத் தக்கதாய், அழிவும் இல்லாமல், நனி மிக வளம் கொழிப்பதே நாடு” என்கிறது குறள்.

“தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.”

“பெரும் பொருளால் பெட்டக்கது ஆகி,
அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு.”

—குறள் : 731, 732

எரிபொருள், குடிநீர், உணவு, தருப்பைப்புல், மாலைகள், பரந்தகன்ற திறந்தவெளி ஆகிய இவை எந்தக் கிராமத்தில் பெருமளவில் கிடைக்குமோ, எங்கு, செல்வந்தர் குவித்து கிடக்கின்றனரோ, மகிழ்ச்சி தரும் இனிய பண்புகளால் நிறைந்த தக்கார் பலர் எங்கு உள்ளனரோ, எது, கள்ளர்களிடமிருந்து பாதுகாப்பினைத் தருகிறதோ, அந்தக் கிராமமே நல்லவர்கள் வாழிடமாகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் எனக்கூறுகிறது. பௌதாயன - தர்மசூத்திரம். [பகுதி : 1. காத்யாயம்: 31 சூத்திரம்: 51]