பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

397


அது நிகழ்வதில்லை) குடிப்பெயர்க்கு முன்னர் ஒரு சிறப்பு அடைமொழி அளிக்கப்படும்: உ-ம்: பெருஞ்சேர்ல்: கடல் பிறக்கோட்டிய வேல்கெழுகுட்டுவன்; பெருநற்கிள்ளி, கரிகால்வளவன்; நெடுஞ்செழியன்; உக்கிரப்பெருவழுதி, ஆரிய நாகரீகம் பரவி, அரசர்கள் சமஸ்கிருத பட்டங்களையும் கடவுள்களின் சமஸ்கிருதப் பெயர்களையும் ஏற்றுக்கொண்ட காலம் வரை, தமிழ் அரசர்களால் மேற்கொள்ளப்பட்ட இயற்பெயர்கள் இவ்வகையைச் சேர்ந்தனவே. ஆகவே, கடல்பிறக்கோட்டிய வேல்கெழுகுட்டுவன், செங்குட்டுவன் ஆகிய இரண்டுமே இயற்பெயர்களாக, இவ்விருவரும் ஒருவனே ஆயின், இது ஒருவனே இரண்டு பெயர்களைக் கொண்டமைக்கான ஒரு வழக்காம். ஆனால், பழங்காலத்தில் அது வழக்காறு அன்று பரணர் பாடிய பதிற்றுப்பத்தின் பாட்டுடைத் தலைவனின் வெற்றிச் செயல்கள் எத்துணை தம்புதற்கு உரியவோ, அத்துணை நம்புதற்கு ஏலாதன: சிலப்பதிகாரம் மூன்றாம் காண்டத்தில் விளக்கப்பட்டிருக்கும். செங்குட்டுவனின் வெற்றிச் செயல்கள். அவன் நீலகிரியில் விருந்து, கங்கைக் கரைக்கு எவ்வித இடையூறும் இன்றிப் படையெடுத்துச் சென்று விடுகிறான். சேரநாட்டின் வட எல்லைக்கண் உள்ள நீலகிரியிலிருந்து கங்கை வெளிவரையும். ஆட்சி செலுத்திய நூற்றுவர் கன்னர், செங்குட்டுவனுக்கு, அவன் குறித்த இடத்தை அடையப் பணிந்து துணைபுரிந்ததாக நூல் கூறுகிறது. நூற்றுவர் கன்னர் என்ற தொடர், சாதகணி என்பதன். பிழைபடுமொழிபெயர்ப்பாதல் அல்லது வேறு ஆகாது. சாதகணியின் ஆட்சி கி. பி. 77க்கு முன்னர்த்தான். கங்கை வரையும் பரவியிருந்தது. அதன் பின்னர்ச் சாக பல்லவரின் பெருகிவரும் ஆற்றலுக்கு முன்பாக: மெல்ல மெல்லச் சுருங்கத் தொடங்கிவிட்டது. பின்னர், அம்மூன்றாம் அதிகாரம், ஆங்கு இருந்தற்கான இலக்கியம் அல்லது கல்வெட்டுச்சான்று, வேறு எதுவும் இல்லாத, கங்கைக்கு அப்பால் உள்ள எண்ணற்ற அரசர்களைச் செங்குட்டுவன் வெற்றி கொண்டதாகவும், அவ்வரசர்களில் இருவர், மறைந்துபோன கண்ணகிசிலைக்காம் கல்லைத் தம்