பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

398

தமிழர் வரலாறு


தலையில் சுமந்து வந்ததாகவும் கூறுகிறது. கங்கைக் கரை மன்னர்களோடு போரிடுவதற்குத் தேவைப்படும் அத்துணைப் பெரிய படையை வழிநடத்திச் செல்வது என்பது, இந்திய நாட்டின் நிலஇயல் கூறுபாடுகள் பற்றி ஏதும் அறியா ஒரு தமிழ்ப் புலவரால் மட்டுமே கற்பனை செய்து பார்க்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியாம் ஆதலின், இவை அனைத்தும் வெறும் பாட்டிக்கதைகளே ஆதல் வேண்டும். தமிழ்ப்படை ஒன்று. கங்கைவரை படையெடுத்துச் சென்றமைக்கு, இந்திய வரலாறு ஒரேயொரு நிகழ்ச்சிக்கு மட்டுமே இடம் அளித்துளது; அது, எவனுடைய ஆட்சி மகாநதி வரையும், படையெடுப்பிற்கு முன்பாகவே பரவி இருந்ததோ, அந்த ராஜேந்திர சோழ தேவரின் நாற்படை. அம்மகாநதியின் கரையிலிருந்து கங்கை, ஒரு சிறு தொலைவே, டெல்லியிலிருந்து இராமேஸ்வரம் வரை நடைபெற்ற ஒரே படை அணி வகுப்பிற்கான் பிறிதொரு நிகழ்ச்சி, மாவிக்காபூரின் படையெடுப்பு. ஆனால் தெலுங்கானத்தின் மையப்பகுதி வரை, அதாவது பாதிக்கும் மேலான பகுதி டெல்லி சுல்தான் ஆட்சியின் ஒரு பகுதியாம். இக்காரண்ங்களால், செங்குட்டுவனின் வட்நாட்டுப் படையெடுப்பு, இந்திய நிலநூல் இயல்பு அறியா அப்பாவிப் புலவரால் கண்டு பிடிக்கப்பட்ட ஒன்று என்ற முடிவுக்குத் துரத்தப்படுகிறோம்; இது, இந்திய வரலாறு பற்றி ஏதும் அறியாதவர்க்கு மட்டுமே ஏற்புடையதாகத் தோன்றும். மூன்றாம் காண்டம், முழுநூலுக்கான ஓர் பின்னிணைப்பு அன்று: அதுவும், முழுநூலின் உண்மையான ஒரு பகுதியே என்பது மறுப்பின்றி ஒப்புக் கொள்ளப்படுமாயினும், அதைத் தென்னிந்தியாவின் பண்டை வரலாற்றுக்கான நம்பத்தகு வரலாற்று மூலமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்கு, இது, பிறிதொரு காரணமாகும்.

கண்ணகி வழிபாடு

செங்குட்டுவனால் நிறுவப்பட்டு மாளுவ உறையூர், இலங்கை அரசர்களாலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்-