பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

400

தமிழர் வரலாறு

மதுரையில் இருந்தவராகக் கருதப்படுபவருமாகிய சாத்தனார். கொடுத்து உதவிய செய்திகளின் அடிப்படையில், சிலப்பதிகாரம், சமணத்துறவியும், செங்குட்டுவன் உடன் பிறந்தவருமாகிய இளங்கோவடிகளால் பாடப்பெற்றது. என்ற கருத்து புனைந்து விடப்பட்டது. இரட்டைக் காப்பியங்கள் பற்றிய ஒரு திறனாய்வு, தமிழ்ர் கருத்துக்களும்’ பழக்க வழக்கங்களும், தமிழ் மக்கள் வாழ்வில் ஒன்றைப் போலவே பிறிதொன்றும் இன்றியமையாதனவாதலின், அவை இரண்டும் இரண்டறக் கலந்து நிற்கும் ஒரு கால நிலையைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது என்பதையும், ஆரிய (பெளத்த) சமயநெறி, பழந்தமிழ்ச் சமய நெறியை இடம் இழக்கச் செய்து விட்ட காலத்திய, மணிமேகலையில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் சமஸ்கிருதப் பெயர்களையே கொள்ளுமளவு, ஆரிய நாகரீகம், தமிழ் நாட்டை ஆட்சி செய்யும் காலத்திய தமிழ் நாட்டு வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் மணிமேகலை, அத்தகையதன்று. என்பதையும் உணர்த்துகிறது. ஆகவே, புனைந்து விடப் பட்ட அக்கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியதன்று: இந் நூலில் இடம் பெற்றிருக்கும் தருக்கம், உயிர் உண்மை இன்மை குறித்த வறட்டுக் கோட்பாடு ஆகியன பற்றிய ஆய்வுகள், அதன் காலம், ஏழாம் நூற்றாண்டாம் எனவும், அக்காலத்திற்கு முன்னர், அது இயற்றப்பட்டிருக்க இயலாது எனவும் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன. (இப்பொருள் பற்றிய, திரு. எஸ். குப்புசாமி சாஸ்திரியாரின் விரிவான ஆராய்ச்சியை காண்க: Journal of Oriental Research: Madras. Vol. I. Page 192-201] சிலப்பதிகாரம் அதற்கு மாறாக ஆரிய நாகரீகமும், ஆரியச் சமய வழிபாட்டு நெறிகளும் அப்பொழுதுதான் மெல்ல இடம் பெறத் தொடங்கிங், பழந்தமிழ் நாகரீகமும், பழந்தமிழ்ச் சமய வழிபாட்டு நெறிகளும், சமுதாயத்தின் அடிநிலைக்கு இன்னமும் தள்ளப்படாத, அதன் காரணத்தால் புலவர்களின் கருத்தெல்லையிலிருந்து அகற்றப்படாத, கி. பி. ஆறாம். நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். மணிமேகலை, சமணப்