பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

401


பெருங்காப்பியமாம் சீவகசிந்தாமணிக்குப் போட்டியாக எழுந்த பெளத்தப் பெருங்காப்பியமே, மணிமேகலை, பரத்தை மாதவியின் மகளாம் என்ற உறவு ஒரு புறம் இருக்கவும், அது சிலப்பதிகாரத்திற்குத் துணையாம் பெருங் காப்பியம் அன்று. மணிமேகலையில் இடம் பெற்றிருக்கும், மறுபிறவி குறித்த கட்டுக் கதைகளும், தருக்க வாதங்களும், ஆரிய தமிழ்க் கடவுள்கள் ஒன்றுபடுத்தப் பெறுவதாம் தொடர்ந்து நிகழ்ந்து வருவதான உண்மை நிகழ்ச்சியினைப் படிப்பவர் எவரும் காண்க் கூடியதான, சிலப்பதிகாரம், இரண்டாம் காண்டத்து வேட்டுவ வரியின், கொற்றவை வழிபடும் காலினியின் கண்ணகி பாராட்டு, அதைத் தொடர்ந்த கொற்றவை வழிபாடு, ஆய்ச்சியர் குரவையின், வர இருக்கும் கேட்டினைத் தவிர்ப்பான் வேண்டி, ஆயர் மகளிர் மேற்கொள்ளும் குரவைக் கூத்துக்களோடு நுண்ணிய வேறுபாடுடையவாய் அமைந்துள்ளன: அகநானூற்றில், வேங்கடம், ஒரு பகுதி திரையர்க்கும் ஒரு பகுதி கள்ளர்க்கும் உரியதாகக் கூறப்பட்டுளது : மேலும், அம்மலைமீது இடம் பெற்றிருக்கும் புகழ் வாய்ந்த கோயில் குறிப்பிடப்படவே இல்லை; ஆனால், சிலப்பதிகாரம் அது எழுதப் பெற்றபோது இருந்ததாக இரண்டு விஷ்ணுக் கோயில்களை விளக்கியுள்ளது: ஆகவே, சிலப்பதிகாரம் பழைய தொகைநூல்களில் தொகுக்கப்பெற்றிருக்கும் பாடல்களிலும், காலத்தால் பிற்பட்டதே ஆம். சிலப்பதிகாரம் கூறும் விஷ்ணு விளக்கம் வருமாறு: ‘'கடல் நீர் உண்டு கறுத்த நீலமேகம், உயர்ந்த பொன்மலை மேலே, பக்கங்களில் விரிந்து மிகாமல் ஒருசேரப் படிந்து கிடப்பதுபோல, படம் விரித்து எழுந்த ஆயிரம் தலைகளையுடைய, யாராலும் அணுகுதற்கு அரிய ஆற்றல் வாய்ந்த பாம்பனைப் பள்ளி மீது, தேவர்கள் பலரும் தொழுதேத்த அலைவீசும் காவிரியாற்றின் இடைக்குறையில், திருமகளை மார்பில் கொண்ட திருமால் படுத்திருக்கும் திருக்கோலமும்!

நீலமேதம், நெடும் பொன் குன்றத்துப்
பால் விரிந்து அகலாது படிந்தது போல

த. வ. !!-26