பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29ஆம் அதிகாரத்தின் பின் இணைப்பு 1

கோவலனைக் கொன்ற பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பது சிலப்பதிகாரத்துள் கூறப்படவில்லை.

மதுரைக் காண்டத்து முடிவில் இடம் பெற்றிருக்கும் கட்டுரை, வடவாரியர்க்குரிய படையை வென்று, தமிழ்நாடு முழுவதையும் ஒரு குடைக்கீழ் வைத்து ஆண்டு, கற்புடைய மனைவியோடு அரியணையில் உயிர்விட்ட பாண்டியன், நெடுஞ்செழியன் எனக்கூறுகிறது:

“வடவாரியர் படை கடந்து
தென் தமிழ் நாடு ஒருங்குகாணப்
புரை தீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்

நெடுஞ்செழியன்’’.

ஆராய்ந்து பாராதே, கோவலனைக் கள்வன் எனக்கொண்டு, கொன்று, மதுரை அழிவிற்குக் காரணமாகிய பாண்டியன் பெயர், நெடுஞ்செழியன் என்பதை, இக்கட்டுரை தான் தெரிவிக்கிறதே ஒழிய, மூலநூலில் அவன் பெயர் குறிப்பிடப்படவில்லை என்கிறார் திருவாளர். பி.டி. சினிவாச அய்யங்கார் அவர்கள் [பக்கம் : 596]

திரு. பி. டி. எஸ். அவர்களின் இக்கூற்று உண்மைக்கு மாறானது.

சோழ நாட்டில் நிகழ்ந்த சிலப்பதிகாரச் செய்திகளைக் கூறும் புகார்க் காண்டத்தில், அச்சிலப்பதிகார நிகழ்ச்சிக் காலத்தில் புகார் நகராண்ட சோழ மன்னனைக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம். சோழ அரசர் அனைவர்க்கும் பொதுப் பெயர்களாம், சென்னி, செம்பியன், காவிரிநாடன், உழைப்-