பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

407

புலிக்கொடித்தேர் உரவோன் என்பனபோலும் பெயர்களால் குறிப்பிடுவதல்லது. அவன் இயற்பெயரை ஒரிடத்திலும் குறிப்பிடாத இளங்கோவடிகளார், பாண்டி நாட்டில் நிகழ்ந்த சிலப்பதிகார நிகழ்ச்சிகளைக் கூறும், மதுரைக் காண்டத்தில், அக்காலை, பாண்டி நாடாண்ட மன்னவனைக் குறிப்பிடுங்கால், பல இடங்களில் கொற்கை வேந்தன், கௌரியர், தென்னவன், பஞ்சவன், பாண்டியன், பொதியில் பொருப்பன், வேம்பன் என்பன போலும், பாண்டியர் குலத்தவர் அனைவரையும் குறிக்கும் பொதுப் பெயர்களால் குறிப்பிட்டிருந்தாலும், சிலப்பதிகார நிகழ்ச்சியோடு தொடர்புடைய பாண்டிய மன்னனைச், செழியன் என்ற அவன் இயற்பெயரால், மதுரைக் காண்டத்தில் மூன்று இடங்களிலும், வஞ்சிக் காண்டத்தில் ஓரிடத்திலும் ஆக நான்கு இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

கோவலனும், கண்ணகியும், மாதவத் தாட்டியோடு, வைகையை மரப்புனையில் கடந்து, மதுரை மூதூரைச் சார்ந்த புறஞ்சேரியில் தங்கி இரவைக்கழித்து, மதுரைமா நகர் விழித்துக் கொண்டதை விளக்கும் நிலையில், இளங்கோ வடிகளார், மதுரையைக் குறிப்பிடும் போது, பகையரசர் தலை ஒடுங்க வாளேந்தும் “செழியன்கூடல்”'எனக் குறிப்பிட்டுள்ளார்.

“வேந்து தலைபனிப்ப ஏந்துவாள் செழியன்
ஒங்குயர் கூடல்.”

—14. ஊர் காண்காதை : 5-6

நீதிகேட்டு வழக்காலை, கையில் சிலம்பேந்திக் காவலன் கோயில் முன் நின்று. “சிலம் பேந்திய கையளாய்க் கணவனை இழந்தான் ஒருத்தி கடைவாயிலில் காத்திருக்கிறாள்” என்பதைக் காவலன் பால் கடிதின் அறிவிப்பாயாக எனக் கண்ணகியால் ஏவப்பட்ட வாயிற்காவலன், பாண்டியன் முன் சென்று, கூற்வேண்டியதைக் கூறுவதன் முன்னர், மன்னனை வாழ்த்தும் மரபினையொட்டி வாழ்த்துங்கால்,