பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

409

“கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும்
ஓவியச் சுற்றத்து உரை அவிந் திருப்ப.” —22. அழல்படுகாதை : 1-11

கண்ணகி சிலைக்காக, இமயத்தே தேர்ந்தெடுத்து கல்லைக் கனகவிசயர் தலைமேல் ஏற்றிக்கொண்டு மீளும், செங்குட்டுவன், கங்கையின் தென்கரையில் சிறிதே, பாடிகொண்டிருந்த போது, குமரித்துறை படிந்து, கங்கை ஆடப் போந்த மாடல மறையோன், செங்குட்டுவனுக்கு, மதுரையில் நிகழ்ந்தன அனைத்தையும் நிரலே எடுத்துச்கூறுங்கால், மதுரை மன்னன் பெயரைச் செழியன் என்றே குறிப்பிட்டுள்ளான்;

“பொற்றேர்ச் செழியன் மதுரை மாநகர்”

—27 நீர்ப்படை காதை 84.

இவ்வாறு, சிலப்பதிகாரத்து மதுரை மன்னனாம் செழியன் பெயர், சிலப்பதிகார மூலத்தில் நான்கு இடங்களில் குறிப்பிடப்பெற்றிருப்பது மட்டுமல்லாமல், மதுரைக் காண்டத்துக் கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் நெடுஞ்செழியனுக்குச் சிறப்பளிக்கும் செய்தியாக அதில் கூறப்பட்டிருக்கும், குற்றமிலாக் கோவலனைக் கொன்ற தான் அரசன் அல்லன் : தானே கள்வன் என்பதை உலகறியச் செய்ய, அரசுகட்டிலில் விழ்ந்து உயிர்துறக்க, அது கண்ணுற்று, கணவனை இழந்தோர்க்குக் காட்டுவதுஇல் எனக் கூறியவாறே அரசமாதேவியும் ஆண்டே உயிரிழந்த நிகழ்ச்சி, அழற்படுகாதைப் பகுதியிலும் கூறப்பட்டுளது. செய்திமட்டுமல்லாமல், “தென் தமிழ்நாடு ஒருங்கு காணப்புரைதீர் கற்பின் தேவி தன்னுடன், அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்” எனக்கட்டுரைத் தொடரில் வந்துள்ள சொற்றொடர், இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப் புரைதிர்