பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

414

தமிழர் வரலாறு


கல் கொணரச் சென்றபோது, கங்கை வடகரை மன்னர், உத்திரன் முதலானோரை வென்று. கனக விஜயர் மீது கல்லேற்றிக் கொணர்ந்தது, (கால்கோள் காதை : 182-191), 5) மைத்துனன் கிள்ளி வளவனுக்காக, ஒன்பது மன்னரை நேரிவாயிலில் அழித்தது (நீர்ப்படை காதை . 118-123: நடுகல் காதை : 1.16-17), 4) பழையன் வேம்பு தடிந்தது, (நீர்ப்படை காதை 124-125), 5) வியலூர் அழித்தது (நடுகல் காதை : 114-15), 6) இடும்பிற் புறத்தில் கொடும் போர் வென்றது (நடுகல் காதை : 118-119), 7) நெடுங்கடல் ஒட்டியது (நடுகல் காதை 119) ஆக ஏழு நிகழ்ச்சிகளைக் கூறுகிறது.

பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்துப் பாடிய பரணர், செங்குட்டுவன் கடலோட்டிய நிகழ்ச்சியை, ஐந்தாம்பத்து 1, 5, 6, 8 பாடல்களிலும், அகநானூற்றிலும் (212), பழையன் வேம்பு தடிந்த நிகழ்ச்சியை, ஐந்தாம்பத்து 4, 9 பாடல்களிலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆக, பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்துப் பதிகம், அதன் பாக்கள், வஞ்சிக் காண்டம் ஆகிய இவை அனைத்தாலும் அறியப்படும் செங்குட்டுவன் செயல்களில், !) கடல் பிறக்கு ஒட்டியது, 2) பழையன் வேம்பு தடிந்தது ஆகிய இரு நிகழ்ச்சிகளைப், பதிகமும் கூறுகிறது; பரணரும் கூறியுள்ளார்; வஞ்சிக் காண்டமும் கூறியுளது. 1) கண்ணகி சிலைக்கான கல் கொண்டது. 2) இடும் பிற் புறத்து இறுத்தது, 3) வியலூர் எறிந்தது, 4) நேரி வாயிலில் ஒன்பது மன்னரை அழித்தது ஆகிய நான்கு நிகழ்ச்சிகளைப் பதிகமும் கூறுகிறது ; வஞ்சிக் காண்டமும் கூறுகிறது, பரணர் கூறவில்லை : கொடுகூர் எறிந்ததைப் பதிகம் மட்டுமே கூறுகிறது வஞ்சிக் காண்டத்தில் அது, இடம் பெறவில்லை ; அதேபோல், தாயைக் கங்கையில் நீராட்டிய நிகழ்ச்சியை வஞ்சிக் காண்டம் மட்டுமே கூறுகிறது. அது, பதிகத்தில் இடம் பெறவில்லை:

ஆகவே, பதிகத்தில் கூறப்பட்டிருக்கும், செங்குட்டுவன் வீரச் செயல்கள் அனைத்தையும், வஞ்சிக் காண்டத்தில்,