பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

418

தமிழர் வரலாறு

2, 5, 6 ஆம் பதிகங்கள். சிறப்படை கொடுத்து நெடுஞ் சேரலாதன் என அழைக்கின்றன;

கரிகாலன் பிறந்த குடி உணர்த்தும் சிறப்பு அடை எதுவும் தராமல், "கரிகால்" என்றே பரணர் அழைக்க (அகம் : 125, 246, 376), குடி உணர்த்தும் "வளவன்" என்ற சிறப்பு அடை பின்தொடாரக், "கரிகால் வளவன்" என வெண்ணிககுயத்தி யாரும் (புறம் : 60), முடத்தாமக்கண்ணியாரும் (பொருநராற்றுப்படை 148), மாமூலனாரும். (அகம் : 55) அழைத்துள்ளனர். கரிகால் என்ற அவன் இயற்பெயரை விடுத்து. அவன் குடிப்பெயர் ஒன்றே தோன்ற, "வளவ" எனக் கருங்குழல் ஆதனாரும் (புறம் 7) அக்குடிப் பெயர்க்கு முன்னர்த், "திரு" "மா" என்ற இரு சிறப்பு அடைகளைக் கொடுத்துத் "திருமாவளவன்" எனக் கடியலூர் உருத்திரன் கண்ணனாரும் (பட்டினப்பாலை : 299) அழைத்துள்ளனர். இளங்கோவடிகளார். இந்திரவிழவூர் எடுத்த காதையில் "திருமாவளவன்" (90) என்றும், வஞ்சின மாலையில் "கரிகால் வளவன்" (11) என்றும் இருபெயர் இட்டு அழைத்துள்ளார்.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்குப், "பசும் பூண்செழியன்" "வெல்போர்ச் செழியன்" என்ற இரு சிறப்பு அடைகளை, இடைக்குன்றுார்க்கிழாரும் (புறம்: 76, 79), "மறப்போர்ச் செழியன்", "பசும்பூண் பாண்டியன்" என்ற இரு சிறப்பு அடைகளைப் பரணரும் (அகம்: 116, 162, குறுந்: 353) "கொடித்தேர்ச்செழியன்" (அகம் 36, 57), "பசும் பூண்பாண்டியன்" (அகம் : 258) என்ற இரு சிறப்புப் பெயர்களை நக்கீரரும் சூட்டி அழைத்து உள்ளனர்,

ஆக, இது காரும் எடுத்துக் கூறிய விளக்கங்களால், பரணர், செங்குட்டுவன் பெயரைக் குறிப்பிடவில்லை; அவன் வடநாட்டுப் படையெடுப்பையும் கூறவில்லை : ஒருவனே இரண்டு சிறப்புப் பெயர்களை மேற்கொள்ளும் வழக்கம்