பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

428

தமிழர் வரலாறு



குயில் பொதும்பர் நீழல்குறுக, அயிர்ப்பின்றி
மாயக் குழவி எடுத்து, மடித் திரைத்துத்
தாய்கைக் கொடுத்தாள், அத்தையாளாள் : தூய
மறையோன் பின் மானியாய், வான் பொருட் கேள்வித்
துறை போய், அவர் முடிந்த பின்னர், மறையோனும்,
தாயத்தாரோடும் வழக்குரைத்துத் தத்தைக்கும்
தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து மேயநாள்
தேவந்தி என்பாள் மனைவி அவளுக்குப்
பூ வந்த உண்கண் பொறுக்கு என்று மேவித் தன்
மூவாஇளநலம் காட்டி என் கோட்டத்து

நீ வா என உரைத் து நீங்குதலும்.”
-கனாத் திறம் உரைத்த காதை : 5-36.

என்ற வரிகளைக் காண்க

ஆக, முதல் இரு காண்டங்களில் இடம் பெறாமல், மூன்றாவது காண்டத்தில் மட்டுமே இடம் பெற்றிருக்கும். இயற்கைகொடு பொருந்தா நிகழ்ச்சி, கண்ணகி, செங்குட்டு வனுக்குக் காட்சி அளித்து, “தென்னவன் தீதிலன்” எனக் கூறியதாகக் கூறப்பட்டிருக்கும் ஒன்று மட்டுமே.

இதற்கு மாறாக, இயற்கை யொடு பொருந்தா நிகழ்ச்சிகள் ஒரு சிலவே இடம் பெற்றிருப்பதாகத் திரு. அய்யங்கார் மதிக்கும் முதல் இரு காண்டங்களில், அவை, ஒன்றோ, இரண்டோ அன்று : பலப்பல, இதே, அவற்றின் நீண்ட பட்டியல் :

1. மு. சுகுந்தன் என்னும் மன்னனுக்கு வரும் இடையூற்றைப் போக்கி, அவனைக் காப்பாய் என இந்திரன் ஏவ, அப்பணியேற்று வந்துக்காத்து நிற்கும் காவல் பூதம். “வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்கு எனத் தேவர் கோமான் ஏவ விற்போத்த கர்வல் பூதம்” (இந்திர விழவூர் எடுத்த காதை 65-67)