பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

430

தமிழர் வரலாறு


5) அரசன் செங்கோல் கெடக், கொடுங்கோலன் ஆயினும், அறங்கூர் அவைகளில், வழங்கும் தீர்ப்பு, நடுவு நிலைமையினின்று தவறினாலும், அவற்றை வாயால் உரையாது கண்ணீர் சொரிந்து காட்டும் பாவை." "அரைசு கோல் கோடினும் , அறங்கூர் அவையத்து உரைநூல் கோடி ஒரு திறம்பற்றினும், நாவொடு நவிலாது நவை நீர் உகுத்துப் யாவை நின்று அழு உம்," -மேற்படி : 135.138.

6) தம்முள் மூழ்கி நீராடி எழுவாரைக் கணவரொடு சேர்க்கும் சோமகுண்டம், சூரிய குண்டங்களாம் குளங்கள், தன்னை வலம் வந்து தொழுவாரைக் கணவரொடு சேர்க்கும் காமவேள் கோட்டம். "சோமகுண்டம் சூரியகுண்டம் துறைமூழ்கிக், காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு தாமின்புறுவர் உலகத்துத் தையலார்" (கனாத்திறம் உரைத்த காதை 59-61)

7) தன்னில் நீராடுவார்க்கு, இந்திரனால் இயற்றப் பட்ட ஐந்திர வியாகரணம் என்னும் இலக்கண நூல் அறிவினைத் தரும் புண்ணிய சரவணப் பொய்கை; "புண்ணிய சரவணம் பொருந்துவீராயின், விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவிர்." (காடுகாண் காதை 98-99);

8) தன்னில் நீராடுவார்க்கு, அவர் பழம்பிறப்பை உணர்த்தவல்ல பவகாரணிப் பொய்கை: "பவகாரணி படிந்து ஆடுவீராயின் பவகாரணத்தின் பழம் பிறப்பு எய்துவீர்" (காடுகாண் காதை . 100-101),

9) தன்னில் நீராடுவார்க்கு அவர் நினைத்தன எல்லாம் தர வல்ல இட்டசித்திப் பொய்கை "இட்டசித்தி எய்துவீராயின் இட்டசித்தி எய்துவீர்" (காடுகாண் காதை : 102-103):

10) வசந்தமாலை வடிவில் வந்து, கோவலனை வழிமடக்க, அவன் பாய்கலைப்பாவை மந்திரம் சொல்ல தன் உண்மை வடிவம் காட்டி ஓடிப் போகும் வனசாரணி என்னும்,