பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

433


ஆக, நடக்க இயலாத, நம்புதற்கு இயலாத இயற்கையொடு பொருந்தாச் செய்திகள், புகார் மதுரைக் காண்டங்களிலும், வஞ்சிக்காண்டத்தில் அதிகம். ஆகவே, ‘வஞ்சிக் காண்ட்ம், சிலப்பதிகாரத்தின் அங்கமாதல் இயலாது எனத் திரு, அய்யங்கார் காட்டும் காரணம் பொருந்தாது என்பது மேலே கூறிய எடுத்துக் காட்டுக்களால் விளங்கும்.

கோவலனும் கண்ணகியும், புகார் நீங்கி மதுரைக்குச் சென்றபோது கடந்து சென்ற நாடுகளின் இயற்கை நலங்களை விரிவாக உரைக்கும் இளங்கோவடிகளே, வஞ்சிக் காண்டத்தையும். பாடியிருந்தால், செங்குட்டுவன் கடந்து சென்ற வளநாட்டு இயற்கை நலங்களையும் பாடியிருப்பார். ஆனால் அது பாடப்பெறவில்லை; ஆகவே வஞ்சிக்காண்டம், அவர் பாடியதாகாது என்ப்து ஐயங்கார் காட்டும் மற்றொரு காரணம்...

புகார்க்கும் மதுரைக்கும் இடையில் உள்ள நாடுகள் வழியாகக், கோவலனும் கண்ணகியும், முதன் முறையாகச் செல்லுகின்றனர். ஆகவே, அவர்களுக்கு அவ்வழி இயல்புகளைக் காட்டிச் செல்ல வேண்டியது தேவைப்பட்டது. அதனால் இளங்கோவடிகளார், அந்நாட்டு இயல்புகளையெல்லாம் விளங்கக் கூறிச் சென்றார்.

ஆனால், நீலகிரிக்கும், கங்கை வெளிக்கும் இடைப்பட்ட நாடுகள் வழியாகச், செங்குட்டுவன் ஒரு முறையே சென்றவன் அல்லன்: கண்ணகி சிலைக்காகச் செல்வதற்கு முன்பும், அவ்வழியில், அவன் ஒருமுறை சென்றுள்ளான். தன் தாயைக் கங்கையில் நீராட்டக் கொண்டு சென்று, அப்போது தன்னை எதிர்த்த ஆரிய அரசர் ஆயிரவரை வென்று, கருதியது முடித்து வந்துள்ளான் “கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம் எங்கோமகளை ஆட்டிய அந்நாள், ஆரிய மன்னர் சரைஞ்நூற்றுவர்க்கு ஒரு நீ ஆகிய செருவெங்கோலம் கண் விழித்துக் கண்டது கடுங்கண் கூற்றம்’' என்ற, செங்குட்டுவன் படைத் தலைவன் கூற்றினைக் கா

த.வ. ll-28