பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காிகாலன் 35

இத்தொடர்கள், அப்பாடல் பாடப்பெற்றபோது, அதாவது, கரிகாலன் காலத்துக்குச் சிறிது பிற்பட்ட காலத்தில், காவிரியிலிருந்து வெட்டப்பட்ட பாசனக்கால்வாய்கள் இருந்தன என்பதை மட்டுமே உறுதி செய்யும்.

    திருவாளர் வி. எ. சிமித் அவர்கள், கரிகாலன் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்று ஆயிரமாயிரம் கூலியாட்களைக் கொண்டுவந்து, காவிரி ஆற்றிற்குத் தான் கட்டிய நூறு மைல் நீளக் கரை கட்டும் பணியில் ஈடுபடுத்தினான். காவிரிப்பட்டினத்தைத் தோற்றுவித்தான் எனப் பழந்தமிழ்ப் புலவர்களால் கூறப்பட்டுள்ளர் எனக் கூறியுள்ளார். (The Early History of India. 4th Edition. Page 481). பொய்க்கூற்றின் ஒரு சிறு கூறு இது: கரிகாலனின் ஈழப் படையெடுப்பு குறித்தோ, சிறை கொண்ட வீரர்களைக் கொணர்ந்தது குறித்தோ, பழந்தமிழ்ப் புலவர் எவரும் குறிப்பிடவில்லை. இவ்வறிவிப்புகள், மிகவும் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்த ஈழநாட்டுக் கற்பனைக் காலக் கணிப்புகளிலேயே   (Ceylonese Legendry chronicles) smawūLG),காணப்படு கின்றன. அதுவுமல்லாமல், நுாறுமைல் நீளக்கரை பற்றிய குறிப்பு எங்கும் காணப்படவில்லை. கரிகாலன் கட்டிய கரை, எத்துணைக் குறுகியது, எவ்வளவு நீண்டது என்பதைக் கண்டறிவது அறவே இயலாது. காவேரிப்பட்டினம் ஜாதகக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளமையாலும், அக்கதைகள் எழுவதற்கு நெடுங்காலத்திற்கு முன் பிருந்தே, அது. துறைமுகப் பட்டினமாக இருந்தது. ஆதலால் அது, கரிகாலனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது: ஆகவே காவிரிப்பட்டினத்தைக் கரிகாலன் தோற்றுவிக்க வில்லை.

கரிகாலனும் திரிலோச்சன பல்லவனும்:

தெலுங்குக் கல்வெட்டுக்கள், இப்பெரும்பணி, (காவிரிக்குக் கரை கட்டியது) கரிகாலன் ஆணைப்படி, தம்’ கண்களை, அவனுடைய தாமரைக் தான் மீது வைக்கும்