பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

442 தமிழர் வரலாறு

பாடப்பெற்றிருந்தன. அவற்றுன், காலவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன போக, எஞ்சி நின்றனவே பத்துப் பாட்டு, எட்டுத்தொகைப் பாக்கள். அட் பாக்களில் கூற்று நிகழ்த்தும் தலைவன், தலைவி, தாய், தோழி போன்றோரின் கூற்றுக்களில் கிடந்து வழியும் அறநூல், பொருள் நூல் கருத்துக்களுக்கு அளவே இல்லை; அவற்றுள் தொகை துாற்கள் வரிசையுள் தலையாய தொகை நூற்கள் சிலவற்றி விருந்து எடுத்துக் காட்டுக்கு ஒரு சில இதோ:

                    ‘அழிவில முயலும் ஆர்வமாக்கள்
                     வழிபடு தெய்வம் கண் கண்டாங்கு -நற்றிணை: 9.
                     இதற்கு இணையான குறள்:
                    ‘குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
                     மடிதற்றுத் தான் முந்துறும்’ . —1023;
                     பெரியோர்
                     நாடி நட்பின் அல்லது 
                     நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே.’ -நற் :32. 
                     இணையான குறள் 
                     “நாடாது தட்டலின் கேடில்லை: நட்டபின்
                     வீடு இல்லை நட் பாள்பவர்க்கு’ , - 791.
                    “தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்
                     தீரா இடும்பை தரும்.” - 510. 
                     “அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து 
                      பொருள்வயின் பிரிவோர் உரவோர்”: --குறுந் : 20,
                      இணையான குறள்
                     'அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம் 
                      புல்லாா் புரல்விடல்"  - 755