பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-444 தமிழர் வரலாறு

                  ‘உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம் : .
                   நல்லறிவுடையோர் நல்குரவு 
                   உள்ளுதும் பெரும’ -புறம் : 197
                  இணையான குறட்பாக்கள் :
                  ‘நல்லார் கண் பட்ட வறுமையின் இன்னாதே
                   கல்லார்கண் பட்ட திரு.” – 408.
                  ‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான்
                   கேடும் நினைக்கப்படும்’ -- 1693
                   யானைவேட்டுவன் யானையும் பெறுமே 
                   குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே.”
                                                             - புறம் : 214
                   இணையான குறள் :
                  ‘கான முயல் எய்த அம்பினில், யானை
                   பிழைத்த வேல் ஏந்தல் இனிது.” -722.
                 *'உண்டால் அம்ம இவ்வுலகம்
                   தமக்கென முயலா நோன்தாள் 
                   பிறர்க்கென முயலுநர் உண்மையானே.”
                                                    -புறம் : 182
                  இணையான குறட்பாக்கள் :
                  *பண்புடையார் பட்டுண்டு உலகம்; அது இன்றேல்
                   மண்புக்கு மாய்வது மண். . . —994
                   சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
                   தாங்காது மன்னோ பொறை.” —992
                   “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
                    பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே,-புறம்:182: